எல்ஐசியில் தினமும் 42 ரூபாய் முதலீடு செய்தால், ஆயுளுக்கும் ரூ.36,000 கிடைக்கும்!!

First Published | Sep 19, 2024, 9:23 AM IST

இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி வழங்கும் திட்டங்கள் பாதுகாப்பான முதலீட்டுக்கான வாய்ப்பாக உள்ளன. அந்த வகையில் எல்ஐசியின் ஒரு பாலிசி மாதம் 36,000 ரூபாய் கிடைக்க வழிவகை செய்கிறது.

LIC Jeevan Umang Policy

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி (LIC) தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறது. இவற்றில் ஒன்று எல்ஐசி ஜீவன் உமாங் பாலிசி. இந்தப் பாலிசியை எடுத்து முதலீடு செய்பவர்கள் ஆண்டுதோறும் 36,000 ரூபாய் பெறமுடியும்.

LIC Jeevan Umang Policy Benefits

ஜீவன் உமாங் பாலிசி என்பது ஒரு எண்டோவ்மென்ட் பாலிசி. இந்தத் திட்டத்தில் சேரும் பாலிசிதாரர்களுக்கு வருமானத்துடன் காப்பீட்டின் இதர பலன்களும் கிடைக்கும். இந்த பாலிசியில் 15, 20, 25 அல்லது 30 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யும் வாய்ப்பு உள்ளது.

Latest Videos


LIC Jeevan Umang Policy advantages

எல்ஐசியின் ஜீவன் உமங் பாலிசி மற்ற பாலிகளில் இருந்து வேறுபட்டது. 90 நாட்கள் முதல் 55 வயது வரை உள்ள அனைத்து நபர்களும் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் பலன்களைப் பெறலாம். இந்த பாலிசியில் சேருவதற்கு இந்த வயது வரம்புக்குள் இருப்பது உறுதி செய்யப்படும்.

LIC Jeevan Umang Policy premium

எல்ஐசி ஜீவன் உமங் பாலிசியில் ஆயுள் காப்பீடு மற்றும் முதிர்வுத் தொகை இரண்டையும் பெறலாம். முதிர்வு காலம் முடிந்ததும் நிலையான வருமானம் உங்கள் வங்கிக் கணக்கில் வரத் தொடங்கும். இதற்கிடையில் பாலிசி எடுத்தவர் இறந்தால், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அல்லது நாமினியாக நியமிக்கப்பட்ட நபருக்கு இந்தத் தொகை வழங்கப்படும்.

What is LIC Jeevan Umang Policy?

ஜீவன் உமங் பாலிசியில் மிகப் பெரிய சிறப்பு அம்சம் என்னவென்றால், இத்திட்டத்தில் சேர்பவர்களுக்கு 100 வயது வரை பாலிசி கவரேஜ் கிடைக்கும். எல்ஐசியின் இந்தப் பாலிசி மூலம், பிரீமியம் செலுத்தும் காலத்திற்குப் பிறகு 100 ஆண்டுகளுக்கு ஆண்டு வருமானத்தின் பலனைப் பெறலாம்.

LIC Endowment Policy

ஜீவன் உமங் பாலியிசில் முதலீடு செய்யும் தொகையில் 8 சதவீதம் ஆண்டுதோறும் வழங்கப்படும். உதாரணமாக, 15 வயதில் ஜீவன் உமாங் பாலிசியில் சேர்பவர், 4.5 லட்சம் ரூபாய்க்குக் காப்பீட்டு எடுப்பதாக வைத்துக்கொள்வோம். இவர் 15 ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்தினால், 31 வயது ஆகும்போது, ரூ.36,000 கிடைக்க ஆரம்பிக்கும். இது 100 வயது வரை தொடரும். பாலிசிதாரரின் மரணத்திற்குப் பிறகு நாமினிக்கு மொத்தத் தொகையாக வழங்கப்படும்.

LIC Life Insurance

ஒருவேளை பாலிசிதாரர் 25 வயதில் ரூ.5 லட்சத்துக்கு பாலிசி எடுத்து, 30 ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்தினால், அந்த நபர் ஆண்டுக்கு ரூ.14,758 செலுத்த வேண்டியிருக்கும். அதாவது 55 வயது வரை ப்ரீமியம் செலுத்த வேண்டும். அதற்குப் பிறகு 100 வயதை அடையும் வரை ஒவ்வொரு ஆண்டும் காப்பீட்டுத் தொகையில் 8 சதவீதத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

LIC Policy holders

எல்ஐசி ஜீவன் உமாங் பாலிசியில், பாலிசிதாரர் 100 வயதுக்கு முன்பே இறந்துவிட்டால், முழுத் தொகையும் நாமினிக்கு வழங்கப்படும். பாலிசிதாரரின் நாமினி தனது வசதிக்கேற்ப மொத்த தொகையாகவோ அல்லது தவணையாகவோ தொகையை வாங்கிக்கொள்ளலாம்.

LIC Policy Tax Exemption

வருமான வரியின் 80சி பிரிவின் கீழ் இந்தப் பாலிசி மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரி விலக்கு வழங்கப்படுகிறது. சந்தை ஏற்ற இறக்கங்களால் இந்தக் பாலிசியில் பாதிப்பு ஏற்படாது. ஜீவன் உமாங் பாலிசியின் கீழ், குறைந்தபட்சம் ரூ. 2 லட்சம் காப்பீடு கட்டாயம். பாலிசிதாரர் 100 வயது வரை அடிப்படை காப்பீட்டுத் தொகையில் 8 சதவீதத்தைப் பெறலாம். கிராமப்புறங்களில் உள்ள பலர் இந்த பாலிசியில் ஆர்வமாகச் சேர்வதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான முழுமையான விவரங்களை அருகில் உள்ள எல்ஐசி முகவரிடமோ அல்லது எல்ஐசி அலுவலகத்திலோ தெரிந்துகொள்ளலாம்.

click me!