மாதம் தோறும் ரூ.50,000 பென்ஷன் வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!!

Published : Sep 18, 2024, 03:34 PM ISTUpdated : Sep 18, 2024, 03:39 PM IST

உங்கள் ஓய்வுக்குப் பிறகு நல்ல ஓய்வூதியத்தைப் பெற விரும்பினால், தேசிய ஓய்வூதிய திட்டம் நல்ல தேர்வாக இருக்கும். ஓய்வுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் ரூ.50 ஆயிரம் பென்ஷன் கிடைக்க வழிவகுக்கும் இத்திட்டத்தில் எப்படி முதலீடு செய்வது என்று பார்க்கலாம்.

PREV
16
மாதம் தோறும் ரூ.50,000 பென்ஷன் வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!!
Senior citizens pension

எல்லோரும் பணி ஓய்வுக்குப் பிறகு வழக்கம்போல வருமானம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இதற்காக, வெவ்வேறு திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். அதிக பென்ஷன் கிடைக்க வேண்டும் என்று விரும்பினால், மத்திய அரசின் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்வது பலன் அளிக்கும். இந்தத் திட்டம் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) செயல்படுத்தப்பட்டு வருகிறது.

26
NPS for Senior citizens

தேசிய ஓய்வூதியத் திட்டம் சந்தையுடன் இணைக்கப்பட்ட அரசாங்க ஓய்வூதியத் திட்டம் ஆகும். அதாவது இத்திட்டத்தில் செய்யும் முதலீட்டுக்கான வருமானம் சந்தையை அடிப்படையாகக் கொண்டது. இந்தத் திட்டம் ஓய்வூதிய திட்டமிடலில் மிகவும் பிரபலமானது. இந்தத் திட்டம் ஓய்வூதியப் பலனைத் தருவதோடு, மொத்தத் தொகையையும் வழங்குகிறது.

36
NPS investment

40 வயதில் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கினால் கூட, 50,000 ரூபாய் ஓய்வூதியத்தைப் பெற முடியும். இதற்கு எப்படி முதலீடு செய்ய வேண்டும், ஒவ்வொரு மாதமும் டெபாசிட் செய்ய வேண்டிய தொகை எவ்வளவு ஆகிய விவரங்களை இப்போது தெரிந்துகொள்ளலாம்.

46
Pension planning with NPS

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் 18 முதல் 70 வயது வரை உள்ள எந்தவொரு இந்தியக் குடிமகனும் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்தாலும், அந்தப் பணம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படும். ஓய்வு பெறும்போது, ​​60 சதவீத தொகையை மொத்தமாக எடுத்துக்கொள்ளலாம். மேலும் 40 சதவீதம் வருடம் தோறும் கிடைக்கும். இந்த வருடாந்திரத் தொகையில் இருந்து தான் உங்கள் ஓய்வூதியம் அளிக்கப்படும்.

56
Market linked pension scheme

ரூ.50,000 மாதாந்திர ஓய்வூதியம் பெற விரும்பினால், 40 வயதில் இத்திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கி, மாதம்தோறும் குறைந்தபட்சம் ரூ.15,000 முதலீடு செய்ய வேண்டும். 65 வயது வரை இந்த முதலீட்டைச் செய்ய வேண்டும். அதாவது 25 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.15,000 இத்திட்டத்தில் டெபாசிட் செய்ய வேண்டும்.

66
National Pension System

25 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.45 லட்சமாக இருக்கும். இந்தத் தொகைக்கு 10 சதவீத வட்டி கிடைத்தால், வட்டியில் இருந்து ரூ.1,55,68,356 கிடைக்கும். இதன்படி, 45,00,000 + 1,55,68,356 = 2,00,68,356 ரூபாய்க்கான கார்பஸ் சேர்ந்துவிடும். இந்தத் தொகையில் 60 சதவீதம், அதாவது ரூ.1,20,41,013, மொத்தமாகக் கிடைத்துவிடும். மீதமுள்ள 40 சதவீதம், அதாவது ரூ.80,27,342, ஆண்டுத் தொகையாகக் இருக்கும். இதில் 8 சதவீதம் வட்டியாகக் கிடைக்கும் என்று வைத்துக்கொண்டால், மாதம் தோறும் உங்களுக்கு ரூ.53,516 பென்ஷன் தொகை கிடைக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories