சென்னையில் இருந்து காஷ்மீர் சுற்றுலா! ஐஆர்சிடிசி வழங்கும் சூப்பர் ஹனிமூன் பேக்கேஜ்!

First Published | Sep 18, 2024, 9:04 AM IST

ஐஆர்சிடிசி (IRCTC) வழங்கும் பேக்கேஜ் சென்னையில் இருந்து காஷ்மீருக்குச் சுற்றுலா செல்ல மிக அற்புதமான வாய்ப்பு காத்திருக்கிறது. 5 இரவுகள் மற்றும் 6 பகல்கள் காஷ்மீரின் அழகை ரசிக்கலாம். ரயில்வேயின் இந்த பேக்கேஜில் பற்றி இத்தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

பூலோக சொர்க்கம் என்று அழைக்கப்படும் இடம் காஷ்மீர். அழகான பனி படர்ந்த மலைகள், பசுமையான பள்ளத்தாக்குகள், ஏரிகள் காஷ்மீரின் அழகை கூட்டுகின்றன. குல்மார்க், பஹல்காம், சோன்மார்க் போன்ற பல அற்புதமான இடங்கள் காஷ்மீரில் உள்ளன. காஷ்மீரின் அழகு அதன் இயற்கை அழகில் மட்டுமல்ல. அதன் கலாச்சாரம், உணவு ஆகியவையும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றன.

ஐஆர்சிடிசி (IRCTC) இந்த டூர் பேக்கேஜுகுக வைத்திருக்கும் பெயர் காஷ்மீர் ஹெவன் ஆன் எர்த் (Kashmir Heaven on Earth). இந்த டூர் பேக்கேஜில் மொத்தம் 5 இரவுகள் மற்றும் 6 பகல்கள் காஷ்மீரில் தங்கி பல சுற்றுலாத் தலங்களைக் கண்டு மகிழலாம்.
 

Tap to resize

இந்த டூர் பேக்கேஜ் செப்டம்பர் 24, 2024 அன்று சென்னையில் இருந்து தொடங்குகிறது.  இது ஐஆர்சிடிசியின் ஃப்ளைட் டூர் பேக்கேஜ் என்பதால், விமானப் பயணத்தில்  காஷ்மீருக்குப் பறக்கலாம். காஷ்மீரை அடைந்த பிறகு, மற்ற இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் கார்களில் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

டூர் பேக்கேஜின் கீழ், சுற்றுலாப் பயணிகள் ஸ்ரீநகர், குல்மார்க், சோன்மார்க் மற்றும் பஹல்காம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்தத் திட்டத்தில் பயணிகளுக்கு உணவு, தங்குமிட வசதி போன்ற ஏற்பாடுகளையும் ஐஆர்சிடிசி கவனித்துக்கொள்ளும்.
 

கட்டணம் பற்றிப் பார்க்கும்போது, தனிநபர்களுக்கு இந்த பேக்கேஜில் ஒரு நபருக்கு 56,500 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இரண்டு பேராகப் பயணம் செய்தால், ஒரு நபருக்கான கட்டணம் ரூ. 51,700. மூன்று பேருடன் பயணம் செய்தால், ஒரு நபருக்கு ரூ.50,500 கட்டணம் செலுத்த வேண்டும்.

Latest Videos

click me!