இப்படி முதலீடு செய்தால் 50 வயதுக்கு மேல் வேலையே செய்யாமல் வசதியாக இருக்கலாம்!

First Published Sep 17, 2024, 4:10 PM IST

ஒருவர் 50 வயதிலேயே சௌகரியமாக ஓய்வு பெறலாமா கூடாதா என்பதை நிர்ணயிக்கும் முக்கியமான காரணி முதலீட்டுத் தொகைதான். வேலை செய்யும் போதே வருமானத்தில் 70% வரை சேமிக்க வேண்டும்.
 

pension plan

பொதுவாக பணி ஓய்வு பெறும் வயது 60. ஆனால் இன்றைய மன அழுத்தம் மிகுந்த பணிச்சூழலில் 50 வயதுக்கு மேல் வேலை செய்வது சவாலானதாக மாறிவிட்டது. இதனால் பலர் 50 வயதில் பணியில் இருந்து ஓய்வு பெறும் வழியை யோசிக்கின்றனர். அவர்கள் அதற்கு முன்கூட்டியே திட்டமிட்டு முதலீடு செய்திருப்பது அவசியம்.

50 வயதாகும் போது ஓய்வு பெற திட்டமிட்டால், சேமிப்புகளை சரியான முறையில் முதலீடு செய்திருக்க வேண்டும். அப்போதுதான்  வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே அன்றாடத் தேவைக்கு ஒரு நிலையான தொகை மாதம் தோறும் கிடைத்துக்கொண்டே இருக்கும். எதிர்பாராத சூழ்நிலையில் ஏற்படும் நிதி தேவைப்பட்டாலும் சமாளிக்க முடியும்.

Latest Videos


நிதிச் சுதந்திரம் பெறும்போது முன்கூட்டியே ஓய்வு பெறும் வாய்ப்பைக் கொடுக்கும். தீவிர சேமிப்பு மற்றும் முதலீடுகளில் கவனம் செலுத்துவது ஐம்பது வயதில் விருப்ப ஓய்வு பெறும்போது எஞ்சிய வாழ்நாள் முழுவதும் தேவையான பாதுகாப்பு கிடைக்கும். இதற்குத் தேவை விரிவான திட்டமிடல், வரவு செலவுகளில் ஒழுக்கம் மற்றும் ஸ்மார்ட் முதலீடு ஆகியவை முன்கூட்டியே ஓய்வு பெறுவதற்கான முக்கிய கூறுகளாகும்.

lic pension plan5

ஒருவர் எவ்வளவு விரைவில் சௌகரியமாக ஓய்வு பெறலாம் என்பதை நிர்ணயிக்கும் மிக முக்கியமான மிக முக்கியமான காரணி முதலீட்டுத் தொகையின் அளவு. முழுநேர வேலை செய்யும் போது ஒருவர் தனது வருமானத்தில் 70% வரை சேமிப்பதை இலக்காகக் கொள்ள வேண்டும். வருடாந்திர செலவினங்களை விட தோராயமாக 30 மடங்கு சேமித்திருந்தால், வேலையில் இருந்து விரைவாக ஓய்வு பெறலாம்.

செலவுகளைக் கணக்கிட்ட பிறகு, ஓய்வுபெறும்போது கிடைக்கும் மொத்த கார்பஸ் அளவு வளர நேரம் அளிக்கும் வகையில், முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். சம்பாதிக்க ஆரம்பித்த உடனேயே சீக்கிரம் சேமிக்கத் தொடங்கிவிடுவது சிறப்பான அணுகுமுறையாக இருக்கும். சேமிப்பதைத் தொடங்கினால் மட்டும் போதாது, அதனை தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். மிக முக்கியமான முதல் படியாகும்.முதலில் தனக்குத் தேவையான கார்பஸை மதிப்பிட வேண்டும். பணவீக்க விகிதம், முதலீட்டில் இருந்து கிடைக்கும் வருவாய் விகிதம் ஆகியவை முதலில் கவனிக்க வேண்டியவை. முதலீடு பணவீக்க விகிதத்தை விட அதிகமாக இருக்க வேண்டும், இல்லையெனில் காலப்போக்கில் பணத்தின் மதிப்பு குறைந்தால், சிக்கல் வரும்.

ஓய்வு பெற்ற பிறகும், பணவீக்கத்துடன் வருமானத் தேவையும் அதிகரிக்கும். பொருட்கள் விலைவாசி உயர்ந்திருக்கும். எனவே, சேமிக்கும் ஆண்டுகளில் பணவீக்கத்தை விட அதிகமான வருவாய் விகிதத்தை குறிவைப்பது முதலீடு செய்வது சிறந்த தேர்வாகும்.

சம்பாதிக்கும் ஆண்டுகளில், முதலீடுகளிலிருந்து எந்த வருமானமும் தேவையில்லை என்ற முடிவுடன் இருக்க வேண்டும். எனவே, ஈக்விட்டி போன்ற அதிக வருமானத்தை ஈட்டும் முதலீடுகளைத் தேர்ந்தெடுப்பது பெரிய கார்பஸை உருவாக்க உதவும். ஓய்வுக்குப் பிறகு இதுபோன்ற ரிஸ்க் இருக்கும் சொத்துக்களில் அதிக முதலீடு செய்வது சவாலாக இருக்கலாம். எனவே, பணியில் இருக்கும்போதே ஈக்விட்டிக்கு அதிக ஒதுக்கீடு செய்வது நல்லது. ஓய்வூதியத் திட்டமிடல் என்பது துல்லியமான மதிப்பீடு, சீக்கிரம் சேமிக்கத் தொடங்குதல், முதலீடு செய்யும் வழிமுறைகள் ஆகியவற்றைப் பொறுத்தது என்று எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

click me!