தினமும் 100 ரூபாய் அபராதம்! சிபில் ஸ்கோர் விதிகளைப் புதுப்பித்த ரிசர்வ் வங்கி!

First Published | Dec 5, 2024, 6:17 PM IST

வங்கிகளில் கடன் பெறுவதில் சிபில் ஸ்கோர் முக்கியக் காரணியாக உள்ளது. இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் முக்கியமான விதிகள் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

RBI Rules for CIBIL Score

சிபில் ஸ்கோர் (CIBIL Score) தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு பல புகார்கள் வந்ததால், அது தொடர்பான புதிய விதிகளை ரிசர்வ் வங்கி அமல்படுத்திள்ளது. நல்ல சிபில் ஸ்கோர் இருந்தால் எளிதாக கடன்கள் பெறலாம் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

CIBIL Score Check

கிரெடிட் ஸ்கோர் 15 நாட்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும். இந்த விதி ஜனவரி 1, 2025 முதல் அமலுக்கு வரும். CIBIL ஸ்கோரை ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி மற்றும் அதற்குப் பிறகு அப்டேட் செய்யலாம். கடன் கொடுக்கும்போது வங்கிகள் சரியான முடிவை எடுக்க இது உதவும். அதே நேரத்தில், மோசமான CIBIL ஸ்கோர் கொண்டவர்கள் அதை சரிசெய்யும் வாய்ப்பையும் பெறலாம்.

Tap to resize

Free CIBIL Score Check

வங்கி அல்லது வங்கி அல்லாத நிறுவனம் சார்பில் வாடிக்கையாளரின் கடன் அறிக்கையைப் பார்த்தால், அந்த வாடிக்கையாளருக்கு தகவல் அனுப்ப வேண்டும். இதை எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம். இது தொடர்பாக பல புகார்கள் வந்ததால், இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

CIBIL Score report

எந்தவொரு வாடிக்கையாளரின் கடன் கோரிக்கையை நிராகரித்தாலும் அதற்கான காரணத்தை அவருக்குத் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் வாடிக்கையாளர் தனக்குக் கடன் மறுக்கப்பட்டதற்கான காரணத்தை அறிந்துகொள்ள முடியும்.

CIBIL Score rules

கடன் நிறுவனங்கள் ஆண்டுதோறும் ஒருமுறை வாடிக்கையாளர்களின் முழுமையான கிரெடிட் ஸ்கோர் விவரங்களை கட்டணம் ஏதும் இல்லாமல் அளிக்க வேண்டும். இந்த அறிக்கையைப் பெறுவதற்கான இணைப்பு நிறுவனத்தின் இணையதளத்தில் இருக்க வேண்டும். இலவச கிரெடிட் ஸ்கோர் அறிக்கை மூலம் வாடிக்கையாளர்கள் சிபில் ஸ்கோர் (CIBIL Score) மற்றும் கிரெடிட் வரலாற்றை அறியலாம்.

Loan Without CIBIL Score

கடனைத் திருப்பிச் செலுத்தாத நிலையில், கணக்கு டீஃபால்ட் கணக்காக மாற்றப்பட உள்ளது என்றால், அதை வாடிக்கையாளரிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இத்தகவலை எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். கிரெடிட் ஸ்கோர் தொடர்பான விவகாரங்களில் தீர்வு காண்பதற்கான நோடல் அதிகாரிகளையும் நியமிக்க வேண்டும். 

CIBIL Score tips

கடன் வழங்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளரின் புகார்களை 30 நாட்களுக்குள் தீர்க்க வேண்டும். இல்லாவிட்டால், தாமதமாகும் காலத்தில் ஒரு நாளைக்கு 100 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். கடன் வழங்கும் நிறுவனத்திற்கு 21 நாட்கள், கிரெடிட் பீரோவுக்கு 9 நாட்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது. 21 நாளில் வங்கி கடன் பணியகத்திற்கு தெரிவிக்காவிட்டால் வங்கி இழப்பீடு கொடுக்கும். வங்கிக்கு தகவல் தெரிவித்து 9 நாட்களில் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், கிரெடிட் பீரோ இழப்பீடு கொடுக்கும்.

Latest Videos

click me!