உச்சத்தை தொட்ட தங்கம் விலை
கடந்த அக்டோபர் 31ம் தேதி 59,640 ரூபாய் என்ற வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. இந்தநிலையில் தங்கத்தின் விலையானது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க கூடும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
அதன் படி அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு சவரன் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாயை தொட வாய்ப்பு இருப்பதாக கூறி வருகின்றனர். எனவே தற்போது தங்கத்தை வாங்கி வைத்தால் வரும் நாட்களில் அதிக லாபம் கிடைக்கும் என பெரிய பெரிய முதலீட்டாளர்கள் அதிகளவிற்கு தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.