RBI Repo Rate: ரெப்போ ரேட்டை மாற்றாமல் தொடர்ந்துள்ள ரிசர்வ் வங்கியின் முடிவு, கடன் வாங்கியவர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. ஆனால் இதே நேரத்தில் இஎம்ஐ சுமையை குறைக்க சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நிபுணர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.
வீட்டு கடன், வாகன கடன் அல்லது தனிநபர் கடன் வாங்கியிருப்பவர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ரெப்போ விகிதத்தை 5.25 சதவீதமாகவே தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது, உடனடி வட்டி உயர்வு அபாயம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் மாதந்திர இஎம்ஐ செலுத்தும் லட்சக்கணக்கான கடன் பெறுநர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
25
வங்கி கடன் வட்டியை குறைக்கும் வழிகள்
ஆனால் வட்டி விகிதம் மாறவில்லை என்பதற்காக கடன் கணக்கை கவனிக்காமல் விடக்கூடாது என நிதி நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில், வட்டி விகிதம் நிலையாக இருக்கும் காலகட்டம்தான் கடன் செலவை குறைக்க சிறந்த நேரமாக கருதப்படுகிறது. குறிப்பாக நீண்டகால வீட்டு கடன் வைத்திருப்பவர்கள் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தலாம். இஎம்ஐ சுமையை குறைக்க உதவும் 2 வழிகளை பார்க்கலாம்.
35
கடன் காலத்தை குறைத்தல்
பல வங்கிகள் வட்டி குறைப்பின் பலனை இஎம்ஐ தொகையில் காட்டாமல், கடன் காலத்தை குறைக்கும் முறையில் செயல்படுத்துகின்றன. எனவே உங்கள் கடன் கணக்கை சரிபார்த்து, முடிந்தால் கடன் காலத்தை குறைக்க வங்கியிடம் கோரிக்கை வைக்கலாம்.
உங்கள் தற்போதைய வங்கி அதிக வட்டி வசூலித்து வந்தால், குறைந்த வட்டி வழங்கும் மற்றொரு வங்கிக்கு கடனை மாற்றும் வாய்ப்பை பரிசீலிக்கலாம். இது மாதந்திர இஎம்ஐ மற்றும் மொத்த வட்டி செலவை குறைக்க உதவும்.
55
ரிசர்வ் வங்கி அறிவிப்பு
இதற்கிடையில், பொருளாதார வளர்ச்சி கணிப்பு சற்றுக் குறைக்கப்பட்டுள்ளதோடு, சர்வதேச சூழ்நிலை மற்றும் பருவமழை நிலவரம் காரணமாக விலைவாசி உயர்வு அபாயம் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, வருமானம் மற்றும் செலவுகளை சமநிலைப்படுத்தும் வகையில் கடன் நிர்வாகத்தை மேற்கொள்வது தற்போதைய சூழலில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.