RBI Limits on UPI: UPI பயனர்களுக்கு RBI கொடுத்த சர்ப்ரைஸ் தீபாவளி பரிசு!

First Published Oct 10, 2024, 1:58 PM IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) UPI 123Pay மற்றும் UPI Lite பரிவர்த்தனைகளுக்கான வரம்புகளை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. UPI 123Pay முறையில் ஒரு பரிவர்த்தனைக்கான வரம்பு ரூ.5,000 லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. UPI Lite வாலட்டில் இந்த வரம்பு ரூ.2,000 லிருந்து ரூ.5,000 ஆக அதிகரித்துள்ளது .

UPI Lite Limit increased

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) UPI 123Pay மற்றும் UPI Lite பரிவர்த்தனைகளுக்கான வரம்புகளை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. UPI 123Pay முறையில் ஒரு பரிவர்த்தனைக்கான வரம்பு ரூ.5,000 லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. UPI Lite வாலட்டில் இந்த வரம்பு ரூ.2,000 லிருந்து ரூ.5,000 ஆக அதிகரித்துள்ளது.

RBI rules on UPI payments

இந்த மாற்றங்கள் மூலம் டிஜிட்டல் பேமெண்ட்டுகள் மேலும் அணுகக்கூடியதாக இருக்கும் என்று ஆர்பிஐ கூறுகிறது. UPI பயன்பாட்டை மேலும் ஊக்குவிக்க, மேலும் இரண்டு முக்கிய அப்டேட்டுபகள் அறிவிக்கப்பட்டுள்ளன

Latest Videos


UPI 123Pay Limit increased

(i) UPI123Payக்கான ஒரு பரிவர்த்தனை வரம்பு ரூ.5,000 லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்படும். (ii) யுபிஐ லைட் வாலட் வரம்பு ரூ.2,000 முதல் ரூ.5,000 ஆக உயர்கிறது. ஒரு பரிவர்த்தனைக்கான வரம்பு ரூ.500 முதல் ரூ.1,000 வரை இருக்கும்” என்று ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறினார்.

UPI Lite

UPI வரம்புகள் அதிகரித்துள்ளதால் அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் இது ரொக்கப் பணப் பயன்பாடு மேலும் குறைவதற்கு வழிவகுக்கும் என்றும் வல்லுநர்கள் கணித்துள்ளார். UPI லைட் வாலட், இப்போது ரூ.5,000 வரம்பு கொண்டிருக்கிறது. ஒரு பரிவர்த்தனைக்கான வரம்பு ரூ.1,000 ஆக உள்ளது. மேலும் குறைந்த மதிப்புள்ள ஆஃப்லைன் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

UPI 123Pay

UPI 123Pay இந்தியாவில் ஸ்மார்ட்போன் அல்லாத சாதாரண போன்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் ஸ்மார்ட்போன் அல்லது இணைய இணைப்பு இல்லாமல்,  டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த முடியும். *99# க்கு டயல் செய்து, வங்கியைத் தேர்ந்தெடுத்து, டெபிட் கார்டு விவரங்களைக் குறிப்பிட்டு, UPI 123Pay பேமெணெட் செட்டிங்கை அமைக்கலாம். இதன் மூலம் UPI PIN, இன்டர்நெட் இணைப்பு இல்லாவிட்டாலும் பாதுகாப்பான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.

click me!