டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை அசுர வளர்ச்சியை கண்டுள்ள நிலையில், UPI ஆனது டிஜிட்டல் கட்டணத்தின் விருப்பமான மற்றும் பாதுகாப்பான முறையாக மாறியுள்ளது. நவம்பர் மாதத்தில் UPI பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 11.23 பில்லியனை எட்டியுள்ளது. UPI மூலம், ஒரே செயலியில் இருந்து பல வங்கிக் கணக்குகளை இயக்கலாம். QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் நீங்கள் எந்த கட்டணத்தையும் செலுத்தலாம் அல்லது யாருடைய எண்ணிற்கும் உடனடியாக பணம் அனுப்பலாம்.
கடந்த வாரமே, பணவியல் கொள்கை மறுஆய்வின் போது, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் UPI மூலம் பணம் செலுத்தும் வரம்பை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார் என்பது நினைவுகூறத்தக்கது..