அடுத்த வாரம் 4 நாள் வங்கி விடுமுறை.. மார்ச் 26–29 வரை வங்கிகள் மூடப்படும்.. முழு லிஸ்ட் இதோ

Published : Mar 23, 2026, 09:54 AM IST

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவிப்பின்படி, மார்ச் 23 முதல் 29 வரை பல இடங்களில் வங்கிகள் மூடப்பட உள்ளன. எனவே, வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்ட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

PREV
15
4 நாள் வங்கி விடுமுறை

அடுத்த வாரம் வங்கி சேவைகளை பயன்படுத்த திட்டமிடுபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவிப்பின்படி, மார்ச் 23 முதல் 29, 2026 வரை சில நாட்களில் பல இடங்களில் வங்கிகள் மூடப்பட உள்ளன. இதில் அரசு மற்றும் தனியார் வங்கிகள் இரண்டும் சேர்க்கப்பட்டுள்ளதால், முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம்.

25
ஆர்பிஐ விடுமுறை

இந்த மாதத்திற்கு மொத்தம் 18 வங்கி விடுமுறை நாட்கள் இருப்பதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இதில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் அடங்கும். பொதுவாக, முதல், மூன்றாவது மற்றும் ஐந்தாம் சனிக்கிழமைகளில் வங்கிகள் இயங்கும். ஆனால், மாநில வாரியாக உள்ளூர் திருநாள் காரணமாக கூடுதல் விடுமுறைகள் இருக்கலாம்.

35
மார்ச் மாத வங்கி விடுமுறை முழு பட்டியல்

மார்ச் 26, வியாழக்கிழமை, ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு அகமதாபாத், மும்பை, கொல்கத்தா, லக்னோ உள்ளிட்ட பல நகரங்களில் வங்கிகள் செயல்படாது. அதேபோல், மார்ச் 27, வெள்ளிக்கிழமை, சைத்திர தசைன் (ராம நவமி) காரணமாக ஹைதராபாத், பாட்னா, விஜயவாடா போன்ற நகரங்களிலும் வங்கிகள் மூடப்படும்.

45
அனைத்து வங்கிகளும் மூடப்படும்

இதற்குப் பிறகு, மார்ச் 28 நான்காவது சனிக்கிழமை என்பதால் நாடு முழுவதும் வங்கிகள் இயங்காது. தொடர்ந்து மார்ச் 29 ஞாயிற்றுக்கிழமை என்பதால், அந்த நாளும் அனைத்து வங்கிகளும் மூடப்படும். இவ்வாறு தொடர்ந்து இரண்டு நாட்கள் முழு விடுமுறை இருக்கும்.

55
அடுத்த வாரம் வங்கி சேவைகள் பாதிப்பு

எனவே, பணம் எடுத்தல், வைப்பு, காசோலை பரிவர்த்தனை போன்ற முக்கிய வேலைகளை முன்கூட்டியே முடித்து வைப்பது நல்லது. அவசர தேவைகளுக்கு நெட் பேங்கிங், மொபைல் ஆப்ஸ் மற்றும் ஏடிஎம் சேவைகளை பயன்படுத்தலாம். உங்கள் பகுதியில் உள்ள விடுமுறை விவரங்கள் உறுதி செய்ய, அருகிலுள்ள வங்கி கிளையுடன் தொடர்பில் இருக்கவும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories