ரத்தன் டாடா மறைவுக்குப் பிறகு, அவரது நெருங்கிய கூட்டாளியான ஷாந்தனு நாயுடுவுக்கு டாடா மோட்டார்ஸில் முக்கியப் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஷாந்தனு இந்தச் செய்தியை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
ரத்தன் டாடா நண்பர் சாந்தனுவுக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் உயர் பொறுப்பு
இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபராக இருந்த ரத்தன் டாடா மறைவுக்குப் பிறகு, வர்த்தக் உலகம் துக்கத்தில் ஆழ்ந்தது. ரத்தன் டாடாவின் தொழில் வாழ்க்கையில் இளம் வயது சாந்தனு நாயுடு ஒரு பெரிய கூட்டாளியாக இருந்தார். ரத்தன் டாடாவின் நெருங்கிய நண்பராகவும் சாந்தனு கருதப்பட்டார். ரத்தன் டாடா மறைவுக்கு 4 மாதங்களுக்குப் பிறகு, சாந்தனு நாயுடுவுக்கு டாடா மோட்டார்ஸில் பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சாந்தனு இந்தத் தகவலை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
24
சாந்தனு நாயுடு டாடா மோட்டார்ஸ்
சாந்தனு தனது சமூக ஊடகப் பதிவில், "டாடா மோட்டார்ஸில் புதிய பதவியை ஏற்க இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என் அப்பா வெள்ளைச் சட்டை, நீல நிற பேண்டில் டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலையிலிருந்து வீடு திரும்புவதை ஜன்னலில் நின்று எதிர்பார்த்து காத்திருப்பேன். இன்று அங்கிருந்து எனது பணியை துவக்குகிறேன். டாடா மோட்டார்ஸின் பொது மேலாளர், தலைமை ஆலோசகர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது'' என்று பதிவிட்டுள்ளார். இதற்கு முன்பு, அவர் குட்ஃபெலோஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அதில் ரத்தன் டாடா முதலீடு செய்திருந்தார்.
34
சமூக ஊடகங்களில் பகிர்வு:

சாந்தனு நாயுடு 1993 இல் ஒரு தெலுங்கு குடும்பத்தில் பிறந்தார். புனே பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற அவர், பின்னர் கார்னெல் பல்கலைக்கழகத்தில் MBA பட்டம் பெற்றார். 2018 ஆம் ஆண்டில், ரத்தன் டாடாவின் உதவியாளராகப் பணியாற்றத் தொடங்கினார். அங்கு அவர் ரத்தன் டாடாவுடன் பல திட்டங்களில் பணியாற்றினார். தெரு நாய்களின் பாதுகாப்பிற்காக ஒரு புதுமையான அமைப்பை உருவாக்கியபோது, ரத்தன் டாடாவுடனான சாந்தனுவின் தொடர்பு மேலும் வலுவடைந்தது. ரத்தன் டாடா இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தார். இந்த ஒத்துழைப்பு சாந்தனுவின் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. ரத்தன் டாடாவின் ஆதரவு அவருக்கு ஒரு பெரிய உத்வேகமாக இருந்தது. சாந்தனு நாயுடு தனது "ஐ கேன் அப்பான் எ லைட்ஹவுஸ்" என்ற புத்தகத்தில் ரத்தன் டாடாவுடனான தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.