Published : Feb 05, 2025, 09:41 AM ISTUpdated : Feb 05, 2025, 09:46 AM IST
தங்கத்தின் விலை கடந்த ஓராண்டாக புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. பிப்ரவரி 2 ஆம் தேதி சவரன் ரூ.62,000ஐ தாண்டியது. இந்த விலை உயர்வு நடுத்தர வர்க்க மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது, இன்று 63 ஆயிரத்தை தங்கம் விலை கடந்துள்ளது.
சவரனுக்கு 1600 ரூபாய் உயர்வு.! 2 நாட்களில் ஜெட் வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை
தங்கத்தின் விலையானது எப்போதும் இல்லாத வகையில் கடந்த ஓராண்டாக வரலாறு காணாத வகையில் புதிய, புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2024ஆம் ஆண்டு இறுதியில் 56ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலையானது ஒரு மாத காலத்தில் 6 ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி வரலாற்றில் முதல் முறையாக சவரனுக்கு ரூ.62,000 என்ற விலையைத் தாண்டியது.
25
நாள் தோறும் அதிகரிக்கும் தங்கம் விலை
இந்த விலை உயர்வால் நடுத்தர வர்க்க மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்களது பெண் குழந்தைகளின் திருமணங்களுக்கு நகை வாங்க காத்திருந்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள். எனவே திருமணத்திற்காக ஒதுக்கிய பட்ஜெட்டில் கூடுதலாக தங்கத்திற்கு பணம் ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது சரசரவென அதிகரித்து வரும் தங்கம் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.
35
தங்கம் விலை உயர்வு காரணம் என்ன.?
அந்த வகையில் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகவும், இந்திய ரூபாய் மதிப்பு குறைந்து வருவதாலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் போரின் தாக்கத்தாலும் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு வருவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தங்கத்தின் விலையானது வரும் நாட்களில் இன்னும் ஜெட் வேகத்தில் உயர வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர்.
45
புதிய உச்சத்தில் தங்கம் விலை
அந்த வகையில் நேற்று முன்தினம் சற்று குறைந்து நகைப்பிரியர்களுக்கு ஓரளவு மகிழ்ச்சி கொடுத்த தங்கம் விலை, நேற்று சரசரவென அதிகரித்தது. இதன் படி ஒரு கிராமுக்கே 105 ரூபாய் உயர்ந்து 7,810 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து 62ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
55
63ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை
இந்தநிலையில் இன்று தங்கத்தின் விலையானது புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 95 ரூபாய் உயர்ந்து 7905 ரூபாய்க்கும், சவரனுக்கு 760 ரூபாய் அதிகரித்து 63ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே நாளையோ அல்லது நாளை மறுதினமோ ஒரு கிராம் 8 ஆயிரம் ரூபாயை கடக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.