Published : Jul 10, 2025, 11:30 AM ISTUpdated : Jul 10, 2025, 11:34 AM IST
தமிழக அரசு பெண்களுக்கு சொத்து பதிவு கட்டணத்தில் 1% தள்ளுபடி அறிவித்துள்ளது. ரூ.10 லட்சத்திற்குட்பட்ட வீடு, நிலம், பிளாட், அப்பார்ட்மென்ட் வாங்கும் பெண்களுக்கு இந்த சலுகை பொருந்தும். இது பெண்கள் சொத்து வாங்கும் எண்ணத்தை ஊக்குவிக்கும்.
நிலம், வீடு, பிளாட், அப்பார்ட்மென்ட் வாங்கும் போது செலவானது பத்திரப் பதிவு கட்டணம் மிகவும் முக்கியமானது. இந்த பதிவு கட்டணத்தை அரசு வசூலிக்கும். சமீபத்தில் தமிழக அரசு பெண்களுக்கு ஒரு நல்ல சலுகையை அறிவித்துள்ளது. அதாவது, பெண்கள் சொத்து வாங்கும்போது பத்திரப் பதிவுக் கட்டணத்தில் 1 சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கும்.
27
பெண்கள் பெயரில் சொத்து குவியும்
இந்த தள்ளுபடி ஒரு வரம்பிற்குள் மட்டுமே கிடைக்கும். குறிப்பாக, நீங்கள் வாங்கும் சொத்து மதிப்பு ரூ.10 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு வீடு ரூ.9,00,000 மதிப்புடையதாக இருந்தால், அதற்கு பதிவு கட்டணத்தில் 1% தள்ளுபடி கிடைக்கும். ஆனால் அந்த சொத்து ரூ.10 லட்சத்தைத் தாண்டினால் இந்த சலுகை கிடையாது. சாதாரணமாக, பதிவு கட்டணம் மற்றும் ஸ்டாம்ப் ட்யூட்டி சேர்த்து சொத்து மதிப்பின் சுமார் 7%–8% வரை செலவாகும். இதுவே குடும்பத்திற்கு பெரிய சுமையாக இருக்கிறது. தற்போது அறிவிக்கப்பட்ட 1% தள்ளுபடி கூட, குடும்ப செலவினத்தை குறைக்கும் சிறிய நன்மை தரும். இது பெண்கள் சொத்து வாங்கும் எண்ணத்தை ஊக்குவிக்கும்.
37
இந்த சலுகை எந்த சொத்துகளுக்கு கிடைக்கும்?
குடியிருப்பு வீடு (Residential House)
நிலம் (Land)
பிளாட் (Plot)
அப்பார்ட்மென்ட் (Apartment)
இந்த திட்டம் மூலம் பெண்களுக்கு சொந்தமாய் சொத்து வாங்குவது சற்று எளிதாகும். பெண்கள் சொத்து வாங்கினால் குடும்பத்துக்கு அதிக பாதுகாப்பும் நம்பிக்கையும் கிடைக்கும். சில மாவட்டங்களில் பெண்கள் பெயரில் சொத்து இருந்தால் வரியிலும் சலுகைகள் கிடைக்க வாய்ப்புண்டு. இதனால் பெண்கள் பெயரில் சொத்து குவியும்.
வாங்கும் சொத்து மதிப்பு ரூ.10 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்
பெண்களின் பெயரில் மட்டும் பத்திரம் பதிவு செய்யப்பட வேண்டும்
உரிய அடையாளம், முகவரி சான்று கொண்டு வர வேண்டும்
பத்திர பதிவு அலுவலகத்தில் அனைத்து கட்டணங்களும் நேர்மையாக செலுத்த வேண்டும்
மேலும், இதுபோன்ற சலுகைகள் பல மாநிலங்களில் நடப்பில் உள்ளன. உதாரணமாக, மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி போன்ற இடங்களில் ஸ்டாம்ப் ட்யூட்டியில் 2%–3% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. தமிழ்நாடு தற்போது 1% தள்ளுபடி அறிவித்துள்ளது என்பது நல்ல தொடக்கம்.
57
இந்தத் திட்டத்தின் பயன்
பெண்கள் சொத்து உரிமை பெறும் வாய்ப்பு அதிகரிக்கும்
பெண்களின் குடும்ப பாதுகாப்பு வலுப்படும்
பெண்களின் தனி சொத்து உரிமை உணர்வு உருவாகும்
67
1% தள்ளுபடி கிடைக்கும்
எல்லா பெண்களும் இதை பற்றி தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும். வங்கியில் கடன் பெற்று சொத்து வாங்கினாலும், இந்த 1% தள்ளுபடி கிடைக்கும். ஆனால் வாங்கும் சொத்து மதிப்பு ரூ.10 லட்சத்தை கடந்தால் தள்ளுபடி கிடையாது.
77
தள்ளுபடியை உறுதி செய்யவும்
பெண்கள் சொத்து வாங்க திட்டமிட்டால், முதலில் மதிப்பீட்டுச் சான்று பெற்றுத் தள்ளுபடியை உறுதி செய்து கொள்ளவும். இவ்வாறு அரசு அறிவித்த இந்த உதவியுடன், பெண்கள் சொந்த வீடு, நிலம் வாங்கி, வாழ்க்கையை மேலும் நலமாக முன்னேற்றலாம்.