PPF Calculator
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது அரசாங்கத்தால் இயக்கப்படும் ஒரு நீண்ட கால சேமிப்பு திட்டமாகும். இந்தத் திட்டம் 1968 ஆம் ஆண்டு இந்திய அரசால் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம், வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் வரிச் சலுகைகளுடன் முதலீட்டாளருக்கு உத்தரவாதமான வருமானத்தை வழங்குவதாகும்.
Public Provident Fund
எந்தவொரு நபரும் தபால் அலுவலகம் அல்லது வங்கியில் PPF கணக்கைத் தொடங்கலாம். குறைந்தபட்ச முதலீடு ரூ. 500. நீங்கள் விரும்பினால், உங்கள் மனைவியின் பெயரிலும் PPF கணக்கைத் தொடங்கலாம். PPF இலிருந்து ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வரியில்லா வருமானத்தை ஈட்ட முடியும். அது எப்படி என்பதைப் பார்க்கலாம்.
PPF maturity period
PPF என்பது ஓய்வூதிய நிதியைத் திரட்டுவதற்கான அரசுத் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். PPF முதலீட்டின் ஆரம்ப லாக்-இன் காலம் 15 ஆண்டுகள். 15 ஆண்டுகளுக்குப் பிறகு, விரும்பினால் 5 ஆண்டுகள் வீதம் நீட்டித்துக்கொண்டே போகலாம்.
PPF Interest Rate
பிபிஎஃப் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.1,06,828 வருமானம் பெறலாம். அதற்கு ஒவ்வொரு நிதியாண்டிலும் ரூ.1.50 லட்சத்தை முதலீடு செய்யத் தொடங்கி, 15 ஆண்டுகள் முதிர்வு காலம் வரை அதைத் தொடர வேண்டும். வட்டியின் அதிகபட்ச பலனைப் பெற, ஒவ்வொரு நிதியாண்டிலும் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 5 தேதிக்குள் முதலீடு செய்ய வேண்டும். மொத்தமாக ரூ.1.5 லட்சம் ஒரே தடவையில் டெபாசிட் செய்ய வேண்டும்.
PPF benefits
ஒவ்வொரு ஆண்டும் ரூ.1.5 லட்சம் முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்தம் ரூ.22.50 லட்சத்தை முதலீடு செய்திருப்பீர்கள். இந்த முதலீட்டுக்கு சுமார் 18.18 லட்சம் ரூபாய் வட்டி கிடைக்கும். இதன்படி முதிர்வுத் தொகை ரூ.40,68,209 ஆக இருக்கும். முதலீட்டாளர்கள் மேலும் ஐந்தாண்டு நீட்டிப்பு செய்து, முன்பு போலவே ஒவ்வொரு ஆண்டும் ரூ.1.50 லட்சத்தை முதலீடு செய்யலாம்.
PPF retirement planning
20 ஆண்டுகளில் முதலீட்டுத் தொகை ரூ.30,00,000 ஆக அதிகரித்து, அதற்கு ரூ.36,58,288 வட்டி கிடைக்கும். இந்த வழியில், முதிர்வுத் தொகை சுமார் 66,58,288 ரூபாயாக இருக்கும். மீண்டும் 5 ஆண்டுகள் கணக்கை நீட்டித்து, ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் தொடர்ந்து முதலீடு செய்யலாம். 25 ஆண்டுகளில் ரூ.37.50 லட்சம் முதலீட்டுக்கு, வட்டி ரூ.65,58,015 வரும். மொத்த முதிர்வுத் தொகை ரூ.1,03,08,015.
PPF scheme eligibility
இவ்வாறு, தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ரூ.1.5 லட்சத்தை PPF கணக்கில் டெபாசிட் செய்துவந்தால், 29 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.43.50 லட்சமாக இருக்கும். அதற்கு சுமார் ரூ.99.26 லட்சம் வட்டி கிடைக்கும். இதன் மூலம் முதிர்வுத் தொகை ரூ.1 கோடியே 42 லட்சத்து 76 ஆயிரத்து 621 வரும். 32 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.48,00,000 ஆக அதிகரித்து வட்டி சுமார் ரூ.1,32,55,534 ஆக இருக்கும். அப்போது கிடைக்கும் முதிர்வுத்தொகை ரூ.1 கோடியே 80 லட்சத்து 55 ஆயிரத்து 534 ஆக இருக்கும். இந்த இடத்தில் முதலீட்டை நிறுத்தலாம்.
PPF Calculator
இப்போது ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்த பணத்தில் பெறப்பட்ட வட்டியை வருமானமாகப் பெறலாம். இந்தத் திட்டத்தை நீங்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நீட்டித்திருந்தால், ஒவ்வொரு வருடமும் ஒருமுறை மட்டுமே வட்டியைத் திரும்பப் பெற முடியும். முதிர்வு காலத்தில் பெறப்பட்ட ரூ.1 கோடியே 80 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்து, வங்கி ஆண்டுக்கு 7.1% வட்டி கொடுத்தால், ஒரு வருடத்தில் சுமார் 15 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் வட்டி கிடைக்கும். இந்த வட்டியை 12 மாதங்களாகப் பிரித்தால், மாதந்தோறும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கும்.