ரூ.25,000 கோடி மின்சக்தி திட்டத்தைக் கைப்பற்றிய அதானி எனர்ஜி நிறுவனம்!

Published : Jan 21, 2025, 10:35 PM ISTUpdated : Jan 21, 2025, 11:12 PM IST

இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான கௌதம் அதானி தனது வணிக சாம்ராஜ்யத்தை தொடர்ந்து வளர்த்து வருகிறார். இப்போது அவரது நிறுவனங்களில் ஒன்றான அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் லிமிடெட் (AESL) ரூ.25,000 கோடி மதிப்பிலான திட்டத்தைத் தன்வசப்படுத்தி இருக்கிறது

PREV
17
ரூ.25,000 கோடி மின்சக்தி திட்டத்தைக் கைப்பற்றிய அதானி எனர்ஜி நிறுவனம்!
HVDC Project

இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான கௌதம் அதானி தனது வணிக சாம்ராஜ்யத்தை தொடர்ந்து வளர்த்து வருகிறார். இப்போது அவரது நிறுவனங்களில் ஒன்றான அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் லிமிடெட் (AESL) ரூ.25,000 கோடி மதிப்பிலான திட்டத்தைத் தன்வசப்படுத்தி இருக்கிறது.

27
Adani Energy

ரூ. 96,112 கோடி சந்தை மூலதனம் கொண்ட அதானி நிறுவனம் ரூ. 25,000 கோடி மதிப்பிலான பட்லா-ஃபதேபூர் HVDC திட்டத்தைப் பெற்றுள்ளதாக அறிவித்திருக்கிறது. இது அதானி குழும நிறுவனம் வென்ற மிகப்பெரிய டிரான்ஸ்மிஷன் ஆர்டராகும். இந்த சமீபத்திய ஆர்டர் உள்பட மொத்தம் ரூ. 54,761 கோடிக்கான ஆர்டர்கள் அதானி நிறுவனத்தின் வசம் உள்ளது என்று அதானி எனர்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

37
Energy Project

இத்திட்டம் ராஜஸ்தானில் இருந்து 6 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வடக்கில் உள்ள தேவை மையங்களுக்கு மாற்றும் திட்டம் ஆகும். "ரூ. 25,000 கோடி மதிப்புமிக்க பட்லா (ராஜஸ்தான்) - ஃபதேபூர் (உத்தர பிரதேசம்) HVDC (உயர் மின்னழுத்த நேரடி மின்னோட்டம்) ஆர்டரை வென்றிருக்கிறோம்" என அதானி நிறுவனம் கூறியுள்ளது.

47
Adani Group

இது அதானி எனர்ஜி நிறுவனம் இன்றுவரை பெற்றுள்ள மிகப்பெரிய ஆர்டர் ஆகும். 25,778 கிமீ டிரான்ஸ்மிஷன் நெட்வொர்க் மற்றும் 84,186 MVA மாற்றும் திறன் கொண்டுள்ளது. இந்நிறுவனம் 4.5 ஆண்டுகளில் திட்டத்தை பூர்த்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.

57
Gautam Adani

இந்தத் திட்டத்துக்கான அதிகாரபூர்வமான ஏலத்தை அதானி எனர்ஜி நிறுவனம் வென்றுள்ளது. REC Power Development & Consultancy Ltd நிறுவனம் ஏல செயல்முறையின் ஒருங்கிணைப்பாளராக இருந்தது. SPV திட்டம் ஜனவரி 20, 2025 அன்று முறையாக அதானி எனர்ஜி நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.

67
Adani Power

பட்லா மற்றும் ஃபதேபூர் இடையே (2,400 கிமீ) 6,000-மெகாவாட் எச்விடிசி அமைப்பை நிறுவுதல் மற்றும் 7,500 எம்விஏ டிரான்ஸ்மிஷன் திறன் ஆகியவை இந்தத் திட்டத்தில் அடங்கும். பட்லா-IIIக்கு அப்பால் ராஜஸ்தானில் உள்ள பல்வேறு REZகளில் இருந்து 6 கிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வட இந்தியாவின் மையங்கள் மற்றும் தேசிய கட்டத்திற்கு விநியோகிக்க இந்தத் திட்டம் உதவும்.

77
Adani HVDC project

தனியார் துறையில் நீண்ட தூர மின் பரிமாற்றத்திற்கு HVDC சொத்தை வைத்திருக்கும் ஒரே நிறுவனம் அதானி எனர்ஜி நிறுவனம்தான். பட்லா-பதேபூர் திட்டம், முந்த்ரா-மகேந்திரகர் திட்டம் மற்றும் ஆரே-குடுஸ் திட்டத்திற்குப் பிறகு அதானி எனர்ஜி நிறுவனம் பெற்றுள்ள மூன்றாவது HVDC திட்டம் ஆகும்.

click me!

Recommended Stories