வட்டி மட்டும் ரூ.2.25 லட்சம்! இந்த போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் முதலீடு பண்ணுங்க!

First Published | Nov 2, 2024, 2:08 PM IST

போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்வதன் மூலம் 2.25 லட்சம் வரை வட்டி ஈட்டலாம். இந்த முதலீட்டிற்கு வருமான வரி விலக்கும் கிடைக்கும்.

Post Office Time Deposit

தபால் அலுவலகத்தின் டைம் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் சில ஆண்டுகளில் வட்டியில் இருந்து மட்டுமே நல்ல வருமானம் ஈட்ட முடியும். இந்தத் திட்டத்தில், அதிக வட்டி விகிதங்களும் வழங்கப்படுகிறது.

Post Office Savings

மொத்தமாக முதலீடு செய்து, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பெரும் தொகையை சம்பாதிக்கக்கூடிய பல அஞ்சல் அலுவலக திட்டங்கள் உள்ளன. அவற்றில் போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டமும் ஒன்று. இந்தத் திட்டத்தில் குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பெரிய தொகையைப் பெறலாம்.

போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால், நீங்கள் 5 வருட காலத்திற்கு முதலீடு செய்யலாம். ஏனெனில் இதில் உங்களுக்கு அதிக வட்டி விகிதங்களின் பலனும் கிடைக்கும். இது தவிர, வரி விலக்கும் பெறலாம். இத்திட்டத்தில் ஒரே நேரத்தில் இரண்டு நன்மைகளைப் பெற முடியும்.

Tap to resize

Post Office Scheme Benefits

போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வது மிகவும் எளிமையானது. தபால் நிலையத்தின் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு கடினமான நிபந்தனைகள் எதுவும் இல்லை. 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவரும் கணக்கு தொடங்கலாம்.

நேரடியாக தபால் நிலையத்திற்குச் சென்று இந்தத் திட்டத்தில் கணக்கு தொடங்கலாம். ஆதார் அட்டை, பான் கார்டு போன்ற சில முக்கிய ஆவணங்களுடன் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களையும் கொடுக்க வேண்டும். கணக்கைத் திறக்கும்போது, ​​இந்தத் திட்டத்தில் முழுப் பணத்தையும் ஒரே தடவை முதலீடு செய்ய வேண்டும்.

Post Office Schemes

உங்கள் பணத்தை முதலீடு செய்வதற்கு முன், எவ்வளவு காலத்திற்கு டெபாசிட் செய்யலாம் என்பதையும் தீர்மானிக்க வேண்டும். டைம் டெபாசிட் திட்டத்தில் ஒரு வருடத்திற்கு முதலீடு செய்தால், 6.9% வட்டி விகிதம் கிடைக்கும். 2 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், 7% வட்டி விகிதமும், 3 வருட முதலீட்டுக்கு 7.1% வட்டி விகிதமும் கிடைக்கும். இது தவிர, 5 வருட காலத்திற்கு முதலீடு செய்யும்போது 7.5% வட்டி விகிதம் கிடைக்கும்.

Post Office Time Deposit for 5 Years

இப்போது, 5 ஆண்டுகளில் ரூ.2,24,974 வருமானத்தைப் பெற இந்தத் திட்டத்தில் எப்படி முதலீடு செய்வது என்று பார்க்கலாம். 5 வருட காலத்திற்கு ரூ. 5 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். 5 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் பெறும் முதிர்வுத் தொகை ரூ.7,24,974 ஆக இருக்கும். அதில் முதலீடு செய்த ரூ.5 லட்சத்தைக் கழித்துப் பார்த்தால், வட்டியாக மட்டும் ரூ.2,24,974 கிடைக்கும்.

Post Office Time Deposit Tax Exemption

இது தவிர, இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மற்றொரு நன்மையையும் பெறுலாம். அதுதான் வருமான வரி விலக்கு. இந்தத் திட்டத்தில் 5 வருட காலத்திற்கு முதலீடு செய்யும் போது, வருமான வரி சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வலிச்சலுகை பெறலாம். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் வரை வரிசையைச் சேமிக்கலாம்.

Latest Videos

click me!