Post Office Scheme: போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டம் மூலம் உங்கள் முதலீட்டுக்கு சூப்பரான வட்டி கிடைக்கும். இந்த பாதுகாப்பான அரசு திட்டத்தில் ரூ. 5 லட்சத்துக்கும் மேல் லாபம் பார்க்கும் வாய்ப்பு உள்ளது. இந்த சூப்பர் திட்டத்தின் முழு விவரங்கள் இதோ.
கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் சிறந்த வழி. 'போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் ஸ்கீம்' திட்டத்தில் ஒரே ஒரு முறை முதலீடு செய்து, வட்டி மூலமாகவே ரூ. 5 லட்சத்துக்கும் அதிகமாக சம்பாதிக்க சூப்பர் வாய்ப்பு உள்ளது.
25
பாதுகாப்பான திட்டம்
போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் முதலீடு செய்வதன் மிகப்பெரிய நன்மை, அதன் பாதுகாப்புதான். இதில் போடும் ஒவ்வொரு ரூபாய்க்கும் அரசாங்கமே கேரண்டி தருகிறது. அதனால் உங்கள் பணம் போய்விடுமோ என்ற பயம் தேவையில்லை. மார்க்கெட் ரிஸ்க் இல்லாததால், இது ஒரு சிறந்த முதலீட்டு வழியாகும்.
இந்த டைம் டெபாசிட் திட்டத்தில் 1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம். 1 ஆண்டுக்கு 6.9%, 2 ஆண்டுகளுக்கு 7.0%, 3 ஆண்டுகளுக்கு 7.1% மற்றும் 5 ஆண்டுகளுக்கு அதிகபட்சமாக 7.5% வட்டி கிடைக்கிறது. இது ஒரு 'ஒன் டைம் இன்வெஸ்ட்மென்ட்' பிளான்.
இந்தத் திட்டத்தில் நீங்கள் ரூ. 12 லட்சத்தை 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், 7.5% வட்டி விகிதத்தில் உங்கள் மொத்தத் தொகை ரூ. 17,39,938 ஆக மாறும். இதில் வட்டி மூலம் மட்டுமே உங்களுக்கு ரூ. 5,39,938 லாபம் கிடைக்கும். இதுவே ரூ. 4.5 லட்சம் முதலீடு செய்தால், வட்டி லாபம் ரூ. 2,02,477.
55
நீண்ட கால முதலீடு
நீங்கள் 3 ஆண்டுகளில் ரூ. 2 லட்சம் லாபம் பார்க்க விரும்பினால், ரூ. 10 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். 7.1% வட்டி விகிதத்தில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் மொத்தத் தொகை ரூ. 12,35,075 ஆக இருக்கும். இதில் வட்டி லாபம் மட்டும் ரூ. 2,35,075. உங்கள் நிதி இலக்குக்கு ஏற்ப கால அளவைத் தேர்ந்தெடுக்கலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.