Indian Railways: ஒரே ஒரு ரயில் டிக்கெட்டில் இந்தியாவையே சுத்தலாம்! 56 நாள் டூர்! 40% பணம் மிச்சம்!

Published : Jul 03, 2026, 08:38 AM IST

Indian Railways: இந்திய ரயில்வேயின் சர்குலர் ஜர்னி டிக்கெட் மூலம் ஒரே ஒரு டிக்கெட்டில் 56 நாட்கள் இந்தியா முழுக்க சுத்தி பார்க்கலாம். இதன்மூலம் 40% வரை கட்டணம் மிச்சமாகும். ரயில்வேயின் இந்த ரகசிய வசதி குறித்து பார்ப்போம்.

PREV
14
சர்குலர் ஜர்னி டிக்கெட்

இந்தியாவில் ரயில் போக்குவரத்து முதுகெலும்பாக உள்ளது. தொலைதூர இடங்களுக்கும் சொகுசாக களைப்பின்றி பயணம் செய்ய முடியும் என்பதால் பலரும் ரயில்களை நாடி வருகின்றனர். நாம் ரயிலில் சொந்த ஊருக்கு செல்வதற்காகவோ அல்லது வேறு மாநிலம் செல்வதற்கோ தனிதனியாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்கிறோம். ஆனால், ஒரே பயணத்தில் பல ஊர்களுக்குச் செல்ல நினைத்தால், ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் தனித்தனி டிக்கெட் எடுத்துப் பணத்தையும் நேரத்தையும் வீணடிக்கிறோம்.

ஆனால் இந்திய ரயில்வேயில் பலரும் அறியாத, பயணிகளுக்குப் பணத்தை மிச்சப்படுத்தும் 'சர்குலர் ஜர்னி டிக்கெட்' (Circular Journey Ticket) என்றொரு அற்புதமான வசதி உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? இதில் ஒரே ஒரு டிக்கெட் எடுத்து 2 மாதம் இந்தியா முழுக்க சுற்றலாம். அது என்ன சர்குலர் டிக்கெட்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

24
சர்குலர் ஜர்னி டிக்கெட் என்றால் என்ன?

நீங்கள் ஒரு குறிப்பிட்ட ரயில் நிலையத்திலிருந்து பயணத்தைத் தொடங்கி, வழியில் பல ஆன்மீகத் தலங்கள் அல்லது சுற்றுலா இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு, மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வர விரும்பினால் இந்த ஒரே ஒரு டிக்கெட்டை எடுத்தால் போதும். 

உதாரணத்துக்கு நீங்கள் சென்னையில் இருந்து கிளம்பி திருச்சியில் மலைக்கோட்டை, மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் கோயில் மற்றும் அங்குள்ள‌ சுற்றுலாத் தலங்கள், கடைசியாக கன்னியாகுமரியில் கால்பதித்து மீண்டும் சென்னை வர விரும்பினால், மேற்கண்ட இந்த ஊர்களுக்கு தனித்தனியாக 5 டிக்கெட்டுகள் எடுக்கத் தேவையில்லை. உங்களிடம் இந்த ஒரே ஒரு சர்குலர் டிக்கெட் இருந்தால் மேற்கண்ட இந்த இடங்களில் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்ய முடியும்.

இதையும் படிங்க: ரயிலில் இந்த 3 'தப்பு' பண்ணா ரூ.2000 ஃபைன், ஜெயில்!: https://tamil.asianetnews.com/gallery/business/indian-railways-rules-avoid-these-3-mistakes-or-face-a-rs-2000-fine-and-jail-8bmbdmk

34
சர்குலர் ஜர்னி டிக்கெட்டின் நன்மைகள்

8 ஊர்களில் தங்கலாம்: உங்கள் பயணப் பாதையில் அதிகபட்சமாக 8 வெவ்வேறு முக்கிய ரயில் நிலையங்களில் நீங்கள் இறங்கி, அந்த ஊர்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு, சில நாட்கள் தங்கிவிட்டு, மீண்டும் அடுத்த ரயிலில் பயணத்தைத் தொடரலாம்.

பணம் மிச்சம்: தனித்தனி டிக்கெட் எடுப்பதை விட, மொத்த கிலோமீட்டர் கணக்கிடப்பட்டு டெலிஸ்கோபிக் (Telescopic Rates) முறையில் கட்டணம் குறைக்கப்படும். இதனால் சாதாரண டிக்கெட் விலையை விட 30% முதல் 40% வரை பணம் மிச்சமாகும்.

56 நாட்கள் வேலிடிட்டி: இந்த ஒரு டிக்கெட்டின் ஆயுட்காலம் கிட்டத்தட்ட 2 மாதங்கள் (56 நாட்கள்) ஆகும். அதுவரை நீங்கள் நிம்மதியாக இந்தியா முழுக்கத் திட்டமிட்டுச் சுற்றலாம்.

44
சர்குலர் ஜர்னி டிக்கெட் வாங்குவது எப்படி?

இதில் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் சர்குலர் டிக்கெட்டை ஆன்லைனில் எடுக்க முடியாது. நீங்கள் பயணத்தைத் தொடங்கவிருக்கும் முக்கிய ரயில் நிலையத்தின் வணிக மேலாளரை (Divisional Commercial Manager) அணுகி, உங்கள் பயணப் பாதையைக் (Route Map) கொடுத்தால், அவர்கள் கட்டணத்தைக் கணக்கிட்டு இந்த சிறப்பு டிக்கெட்டை வழங்குவார்கள். பட்ஜெட் செலவில் சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு இந்த சர்குலர் டிக்கெட் ஒரு வரப்பிரசாதமாகும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories