Post Office Scheme: ரூ.5 லட்சம் போட்டா ரூ.7.25 லட்சம் ரிட்டர்ன்ஸ்! ரிஸ்க் இல்லாம சூப்பர் லாபம்!

Published : Sep 13, 2026, 06:01 AM IST

Post Office Scheme: பாதுகாப்பான முதலீட்டை விரும்புறவங்களுக்கு போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் (TD) ஒரு சிறந்த தேர்வு. வங்கி FD போலவே, இதிலும் வட்டி விகிதம் முன்கூட்டியே நிர்ணயிக்கப்படும். இந்தத் திட்டம் பற்றிய முழு விவரங்களையும் பார்க்கலாம்.

PREV
15
ரூ.5 லட்சம் போட்டா ரூ.7.25 லட்சம் ரிட்டர்ன்ஸ்
போஸ்ட் ஆபீஸ் TD-யில் நீங்கள் முதலீடு செய்யும் காலத்தைப் பொறுத்து வட்டி விகிதம் மாறும். 1 வருட டெபாசிட்டுக்கு 6.9%, 2 வருடங்களுக்கு 7%, 3 வருடங்களுக்கு 7.1%, 5 வருடங்களுக்கு 7.5% என ஆண்டு வட்டி கிடைக்கிறது. தற்போதைக்கு 5 வருட TD-க்குதான் அதிகபட்ச வட்டி. குறுகிய காலத் தேவை உள்ளவர்களுக்கு 1, 2 அல்லது 3 வருட TD திட்டங்கள் உதவியாக இருக்கும்.
25
ரூ.1,000-ல் முதலீட்டைத் தொடங்கலாம்
போஸ்ட் ஆபீஸ் TD கணக்கை குறைந்தபட்சம் ரூ.1,000 செலுத்தி தொடங்கலாம். அதன் பிறகு, ரூ.100-ன் மடங்குகளில் எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். இந்தத் திட்டத்தில் அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு இல்லை. வட்டி காலாண்டு அடிப்படையில் கணக்கிடப்பட்டு, ஆண்டுக்கு ஒருமுறை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.
35
5 ஆண்டு TD-க்கு வரிச் சலுகையும் உண்டு
போஸ்ட் ஆபீஸ் TD திட்டத்தில் 5 வருட காலத்துக்கு முதலீடு செய்தால், வருமான வரிச் சட்டம் பிரிவு 80C-யின் கீழ் வரிச் சலுகை பெறலாம். இந்தத் திட்டத்தில் நீங்கள் தனியாக சிங்கிள் அக்கவுன்ட் அல்லது இன்னொருவருடன் சேர்ந்து ஜாயின்ட் அக்கவுன்ட் திறக்க முடியும். ரிஸ்க் இல்லாத முதலீட்டைத் தேடுபவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு.
45
ரூ.5 லட்சம் போட்டால் எவ்வளவு கிடைக்கும்?
நீங்கள் ரூ.5 லட்சத்தை வெவ்வேறு காலங்களுக்கு முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று பார்ப்போம். 1 வருட TD-ல் சுமார் ரூ.5,33,301 கிடைக்கும். 3 வருடங்களுக்கு முதலீடு செய்தால், மொத்தமாக சுமார் ரூ.6,17,538 கிடைக்கும். இதுவே 5 வருட TD-ல் ரூ.5 லட்சத்தை முதலீடு செய்தால், மெச்சூரிட்டி சமயத்தில் சுமார் ரூ.7,24,974 உங்கள் கைக்கு வரும். அதாவது, வட்டி மட்டும் சுமார் ரூ.2,24,974.
55
மெச்சூரிட்டிக்குப் பிறகும் தொடரலாம்
உங்கள் TD காலம் முடிந்த பிறகும், டெபாசிட்டை நீட்டிக்கும் வசதி உள்ளது. 1 வருட TD-யை 6 மாதங்கள் வரையிலும், 2 வருட TD-யை 12 மாதங்கள் வரையிலும் நீட்டிக்கலாம். 3 மற்றும் 5 வருட TD-க்களை 18 மாதங்கள் வரை நீட்டிக்க முடியும். சந்தை ஏற்ற இறக்கங்களை விரும்பாத, நிலையான வருமானம் தேடுபவர்களுக்கு போஸ்ட் ஆபீஸ் TD ஒரு நல்ல மாற்று.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories