இந்த EEE திட்டத்தில் மாதம் ரூ.1,000 முதலீடு செய்தால் 8 லட்சத்துக்கு மேல் கிடைக்கும்!

First Published | Jan 11, 2025, 11:34 PM IST

Post Office Public Provident Fund (PPF): நீண்ட கால முதலீட்டின் மூலம் உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக நிறைய பணத்தை சேமிக்க விரும்பினால், போஸ்ட் ஆபிஸ் PPF திட்டம் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 டெபாசிட் செய்வதன் மூலம், ரூ.8 லட்சத்துக்கு மேல் சேர்க்கலாம்.

Post Office PPF Scheme

அரசு வழங்கும் முதலீட்டுத் திட்டங்களில் ​​பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) முக்கியமானது. தபால் துறையின் பிரபலமான திட்டங்களில் இதுவும் ஒன்று. இந்த அரசுத் திட்டத்தில், குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். PPF திட்டம் 15 ஆண்டுகளில் முதிர்ச்சியடைகிறது. இதனுடன் வரிச் சலுகைகளும் கிடைக்கும்.

Public Provident Fund (PPF)

நீண்ட கால முதலீட்டின் மூலம் உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக நிறைய பணத்தை சேமிக்க விரும்பினால், இந்தத் திட்டம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். தற்போது இந்த திட்டத்தில் 7.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 உங்கள் குழந்தையின் பெயரில் டெபாசிட் செய்தால், அவருக்கு ரூ.8 லட்சத்துக்கு மேல் சேர்க்கலாம். இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.

Tap to resize

PPF scheme interest rate

இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 முதலீடு செய்தால், ஒரு வருடத்தில் ரூ.12,000 முதலீடு செய்வீர்கள். இந்தத் திட்டம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடையும். ஆனால் நீங்கள் அதை மேலும் 5 ஆண்டுகள் வீதம் இரண்டு முறை நீட்டிக்க வேண்டும். தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு முதலீட்டைத் தொடர வேண்டும். 25 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 முதலீடு செய்தால், மொத்தம் ரூ.3,00,000 முதலீடு செய்வீர்கள். 7.1 சதவீத வட்டி விகிதத்தில், வட்டியில் இருந்து ரூ. 5,24,641 கிடைக்கும். இதன் மூலம் ரூ.8,24,641 முதிர்வுத் தொகை சம்பாதிக்கலாம்.

PPF Investment

PPF கணக்கு நீட்டிப்பு ஒவ்வொன்றும் 5 வருடங்களாக செய்யப்படுகிறது. PPF நீட்டிப்பு விஷயத்தில், முதலீட்டாளருக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒரு வாய்ப்பு, தொடர் முதலீட்டுடன் கணக்கு நீட்டிப்பு. இரண்டாவது வாய்ப்பு முதலீடு இல்லாமல் கணக்கு நீட்டிப்பு. 5 ஆண்டுகள் கணக்கை நீட்டிக்கும்போதே முதலீட்டையும் தொடர வேண்டும்.

PPF benefits

PP கணக்கு முதிர்வு தேதியிலிருந்து 1 வருடம் முடிவதற்குள் நீட்டிப்புக்கான விண்ணப்பத்தை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். நீட்டிப்புக்காக ஒரு படிவத்தை நிரப்பப்பிக் கொடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். PPF கணக்கு தொடங்கப்பட்டுள்ள அதே தபால் அலுவலகம் / வங்கிக் கிளையில் படிவம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

Post Office EEE Schemes

PPF கணக்கு EEE வகை திட்டமாகும். எனவே இந்தத் திட்டத்தில் மூன்று வழிகளில் வரி விலக்கு பெறுவீர்கள். EEE வகை திட்டங்களில், ஆண்டுதோறும் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு வரி இல்லை. இது தவிர, ஒவ்வொரு ஆண்டும் ஈட்டப்படும் வட்டிக்கும் வரி இல்லை. முதிர்வு நேரத்தில் பெறப்படும் மொத்தத் தொகைக்கும் வரி விலக்கு உண்டு. அதாவது முதலீடு, வட்டி, முதிர்வு ஆகிய மூன்றிலும் வரி சேமிப்பு உள்ளது.

Latest Videos

click me!