வெறும் 500 ரூபாய் முதல்! போஸ்ட் ஆபிஸ் சேமிப்புக் கணக்கு டெபாசிட் விதிகள்

First Published | Nov 5, 2024, 7:53 AM IST

வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்ய சேமிப்புக் கணக்கு தொடங்கி, அதில் பணப் பரிவர்த்தனைகள் செய்வது போல, தபால் நிலையத்திலும் சேமிப்புக் கணக்கைத் தொடங்கி, பரிவர்த்தனைகள் செய்ய முடியும். இதில் ஏடிஎம் வசதியும் கிடைக்கும்.

Post Office Savings

வங்கிகளில் சேமிப்புக் கணக்கு தொடங்குவது போல், தபால் நிலையங்களிலும் சேமிப்புக் கணக்குகளை ஆரம்பிக்கலாம். அதில் ஒவ்வொரு மாதமும் பணத்தை டெபாசிட் செய்யலாம். கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு ஆண்டுதோறும் 4 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

Post Office Savings Account

போஸ்ட் ஆபிஸில் சேமிப்புக் கணக்கு தொடங்க குறைந்தபட்சம் ரூ.500 டெபாசிட் செய்ய வேண்டும். எவரும் அருகில் உள்ள தபால் அலுவலகத்திற்குச் சென்று ஆதார் அட்டை, புகைப்படம் ஆகியவற்றை வழங்கி, சேமிப்புக் கணக்கைத் தொடங்கலாம். பெற்றோர் / பாதுகாவலர்கள் ஆவணங்களைச் சமர்ப்பித்து, குழந்தைகள் பெயரிலும் கணக்கு திறக்கலாம். ஒருவர் ஒரு கணக்கை மட்டுமே திறக்க முடியும்.

Tap to resize

Post Office ATM Card

சேமிப்புக் கணக்கைப் பொறுத்தவரை, தபால் அலுவலகத்திற்கும் வங்கிக்கும் அதிக வித்தியாசம் இல்லை. பரிவர்த்தனை வசதி, ஏடிஎம் கார்டு வசதி, பணம் எடுப்பது மற்றும் டெபாசிட் செய்வது போன்றவை கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. வட்டியும் ஏறக்குறைய ஒரே மாதிரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மிகவும் சிறிய மாற்றம்தான் காணப்படுகிறது.

Post Office Deposit Limit

தபால் நிலைய சேமிப்புக் கணக்கும் சேமிப்பிற்கு மட்டுமே. இதில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். ஆனால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் பான் கார்டு வழங்க வேண்டும். ஏனெனில் வருமான வரிச் சட்டத்தின்படி, அதிக அளவு பணத்தை டெபாசிட் செய்ய அல்லது எடுக்க பான் கார்டு அவசியம்.

Post Office Saving Account Benefits

ஒரு வங்கியைப் போலவே, தபால் அலுவலகமும் காசோலை, ஏடிஎம் கார்டு, இ-பேங்கிங், அடல் பென்ஷன் திட்டம், சுரக்ஷா பீமா யோஜனா போன்ற பிற அரசாங்க திட்டங்களை வழங்குகிறது. குறைந்த முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம்.

Post Office Savings Account Interest

போஸ்ட் ஆபிஸ் சேமிப்புக் கணக்கு தொடங்கி ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் டெபாசிட் செய்தால், ஓராண்டில் மொத்த டெபாசிட் ரூ.12 ஆயிரம் ஆகும். இதற்கு 4% வட்டி மூலம் ரூ.480 கிடைக்கும். மொத்தம் 12480 ரூபாய் பெறலாம். 2 ஆண்டுகள் ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் டெபாசிட் செய்தால், 24 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும். அதற்கு 4 சதவீத வட்டியாக 900-960 கிடைக்கும். இப்படியே எத்தனை ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தாலும் வட்டி விகிதம் அப்படியே இருக்கும்.

Closing Post Office Savings Account

உங்கள் அஞ்சலகத்தில் திறக்கப்பட்ட சேமிப்புக் கணக்கை மூட விரும்பினால், டெபாசிட் செய்த தொகையைத் திரும்பப் பெறலாம். போஸ்ட் ஆபிஸ் சேமிப்புக் கணக்கை மூடுவதற்கான படிவத்தை நிரப்பி அளிக்க வேண்டும். கணக்கில் எவ்வளவு தொகை இருந்தாலும், அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டு கணக்கு மூடப்படும்.

Latest Videos

click me!