165 ரூபாய் சேமித்தால் 8.5 லட்சத்துக்கு மேல் கிடைக்கும்! போஸ்ட் ஆபிசில் ஒரு பொன்னான திட்டம்!

First Published | Sep 26, 2024, 5:56 PM IST

தபால் நிலையத்தில் செயல்பட்டு வரும் சிறு சேமிப்புத் திட்டங்களில் ரெக்கரிங் டெபாசிட் திட்டமும் ஒன்று. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் தொகையின் முதிர்வுக் காலம் 5 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Recurring Deposit in Post Office

போஸ்ட் ஆபிஸ் சிறுசேமிப்புத் திட்டங்கள் பாதுகாப்பான முதலீடு மற்றும் சிறந்த வருமானம் அளிப்பவையாக உள்ளன. தபால் அலுவலகத்தில் உள்ள ரெக்கரிங் டெபாசிட் எனப்படும் RD திட்டம் பிரபலமான திட்டங்களில் ஒன்று. இத்திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதன் மூலம், 10 ஆண்டுகளில் ரூ.8.5 லட்சத்திற்கும் அதிகமான தொகையைத் திரட்டலாம். இந்தக் கணக்கில் எப்படி முதலீடு செய்தால் அதிகபட்ச லாபம் பெறலாம் என்று தெரிந்துகொள்வோம்.

Post Office Recurring Deposit Scheme

குழந்தைகள், பெரியவர்கள், சிறியவர்கள் என ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்ப சேமிப்புத் திட்டங்கள் தபால் நிலையத்தில் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றில் தொடர் வைப்புநிதி என்கிற ஆர்.டி. திட்டத்தில் முதலீடு செய்வது சிறப்பான தேர்வாக இருக்கும். இந்தத் திட்டத்தில் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை 10 ஆண்டுகளாக நீட்டிக்கவும் வாய்ப்பு தரப்படுகிறது. 2023ஆம் ஆண்டில் இத்திட்டத்தில் முதலீடு செய்வதற்கான வட்டி விகிதம் 6.5% லிருந்து 6.7% ஆக உயர்த்தப்பட்டது.

Tap to resize

Post Office Saving Scheme

அருகில் உள்ள எந்த போஸ்ட் ஆபிஸ் கிளையிலும் தொடர் வைப்புநிதி கணக்குத் தொடங்கி முதலீட்டை ஆரம்பிக்கலாம். இதில் 100 ரூபாயில் இருந்து முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீட்டு வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இந்த திட்டத்தில் 18 யவது நிறையாத மைனர் பெயரிலும் கணக்கு தொடங்கலாம். அப்போது, அவர்களின் பெற்றோர் பெயரையும் ஆவணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். அவர்களுக்கும் வழக்கமான பலன்கள் கிடைக்கும்.

Post Office RD Scheme

போஸ்ட் ஆபிஸ் ஆர்டி திட்டத்தில் கணக்கைத் தொடங்கி, எதிர்பாராத பிரச்சனைகளால் அதை மூட நினைத்தால், அதற்கும் அனுமதி உண்டு. முதிர்வு காலத்துக்கு முன்பே ஆர்.டி. கணக்கை முடித்துக்கொள்ளலாம். இது தவிர இந்தத் திட்டத்தில் கடன் வசதியும் கிடைக்கும். கணக்கு தொடங்கி ஓராண்டுக்கு முதலீடு செய்த பிறகு, டெபாசிட் செய்திருக்கும் தொகையில் 50 சதவீதம் வரை கடனாகப் பெற முடியும். இந்தக் கடனுக்கான வட்டி விகிதம், ஆர்.டி. கணக்கில் முதலீட்டுக் கிடைப்பதை விட 2 சதவீதம் அதிகம்.

RD Maturity in 5 years

போஸ்ட் ஆஃபீஸ் ஆர்டியில் அதிக அளவு வருமானம் பெற எப்படி முதலீடு செய்யலாம் என்று பார்ப்போம். உதாரணத்துக்கு, RD கணக்கு தொடங்கி ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 முதலீடு செய்வதாக வைத்துக்கொள்ளலாம். இதற்கு தினமும் ரூ.165 சேமித்தால் போதும். இதன் ஒரு ஆண்டில் மொத்த முதலீடு ரூ.60,000 ஆக இருக்கும். ஐந்து ஆண்டுகளில் இத்திட்டம் முதிர்வடையும்போது மொத்த முதலீடு 3 லட்சம் ரூபாயாக இருக்கும். இதற்கு 6.7% வட்டியாக ரூ.56,830 கிடைக்கும்.

RD Maturity in 10 years

5 ஆண்டுகள் கழித்து முதலீடும் வட்டியும் சேர்ந்து கிடைக்கும் ரூ.3,56,830 பணத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்தால், 10 ஆண்டுகள் டெபாசிட் செய்த மொத்தத் தொகை ரூ.6,00,000 ஆக இருக்கும். இதனுடன், 6.7 சதவீதம் வட்டியாக ரூ.2,54,272 கிடைக்கும். இரண்டையும் கூட்டினால் கிடைக்கும் முதிர்வுத் தொகை ரூ.8,54,272 ஆக இருக்கும். முதலீடு செய்த 6 லட்சத்துடன் கூடுதலாக 2.5 லட்சத்துக்கும் மேல் வட்டியின் பலனைப் பெறலாம்.

TDS on RD income

போஸ்ட் ஆஃபீஸ் ஆர்டி திட்டத்தில் செய்யும் முதலீட்டுக்குக் கிடைக்கும் வட்டியில் டிடிஎஸ் (TDS) கழிக்கப்படும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். முதலீட்டாளரின் வருமான வரி தாக்கலின்போது இந்தத் TDS ரீஃபெண்ட் பெற உரிமைகோரலாம். வருமான வரித்துறையின் சரிபார்ப்புக்குப் பிறகு பிடித்தம் செய்த தொகை திருப்பி அளிக்கப்படும். RD இல் சம்பாதிக்கும் வட்டிக்கு 10 சதவீதம் TDS விதிக்கப்படுகிறது. ஆர்.டி.யில் கிடைக்கும் வட்டி 10,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் TDS கழிக்கப்படுகிறது.

Latest Videos

click me!