போஸ்ட் ஆபிஸ் PPF vs NSC: ரூ.5 லட்சம் முதலீட்டிற்கு எதில் அதிக லாபம்? எது பெஸ்ட்?

Published : Nov 12, 2026, 04:55 PM IST

போஸ்ட் ஆபிஸ் சேமிப்புத் திட்டங்களான பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் தேசிய சேமிப்புப் பத்திரம் (NSC) ஆகியவற்றில் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் கிடைக்கும் வருமானம் மற்றும் வரிச் சலுகைகள் குறித்து விரிவாக பார்போம்.

PREV
14
போஸ்ட் ஆபிஸ் PPF vs NSC ஒப்பீடு

கஷ்டப்பட்டு சேமித்த பணத்தை லாபகரமான முறையில் முதலீடு செய்வது எவ்வளவு முக்கியமோ, அதைவிட மிக முக்கியம் உங்களுடைய அசல் தொகை 100% பாதுகாப்பாக இருப்பதுதான். லாபம் ஒருபக்கம் இருந்தாலும், பணத்திற்கான பாதுகாப்புதான் மிக அவசியமான ஒன்று. அந்த வகையில், உங்களுடைய முதலீட்டிற்குப் பாதுகாப்பையும், அதே சமயத்தில் நல்ல லாபத்தையும் தரும் வகையில் போஸ்ட் ஆபிஸ் (Post Office) சேமிப்பு திட்டங்களில் தாராளமாக முதலீடு செய்யலாம். அதிலும் குறிப்பாக, போஸ்ட் ஆபிஸின் PPF மற்றும் NSC திட்டங்கள் பொதுமக்களிடையே மிக முக்கியமானவையாக விளங்குகின்றன.

பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் PPF (Public Provident Fund) மற்றும் தேசிய சேமிப்புப் பத்திரம் எனப்படும் NSC (National Savings Certificate) ஆகிய 2 திட்டங்களும் ஏராளமான மக்களின் முதன்மைத் தேர்வாக உள்ளன. இந்நிலையில், உங்களிடம் 5 லட்சம் ரூபாய் இருந்தால், அதனை இந்த 2 திட்டங்களில் எதில் முதலீடு செய்வது? எதில் லாபம் அதிகம்? எது உங்களுக்கு மிகவும் ஏற்றது? என்பதை இந்தக் கணக்கீடு மூலம் தெரிந்துகொள்வோம்.

24
PPF & NSC விளக்கம்

NSC திட்டம் - இதில் முதலீடு செய்ய அதிகபட்ச வரம்பு என எதுவும் இல்லை. எனவே, உங்களிடம் இருக்கும் பணத்தை ஒரே தவணையாக உங்களால் முதலீடு செய்ய முடியும்.

PPF திட்டம் - இதில் ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை மட்டும்தான் டெபாசிட் செய்ய முடியும். எனவே, ஒரே தவணையில் PPF திட்டத்தில் 5 லட்சம் ரூபாயை முதலீடு செய்ய முடியாது. அதனை பிரித்து பிரித்துத்தான் முதலீடு செய்ய இயலும்.

ரூ.5 லட்சத்திற்கான முதலீட்டுக் கணக்கீடு:

1. தேசிய சேமிப்புப் பத்திரம் (NSC)

முதலீட்டுத் தொகை - ரூ.5,00,000

முதலீட்டு காலம் - 5 ஆண்டுகள்

வட்டி விகிதம் - ஆண்டுக்கு 7.7%

5 ஆண்டுகளுக்கான வட்டி - ரூ.2,24,974

மொத்த முதிர்வுத் தொகை - ரூ.7,24,974

34
பொது வருங்கால வைப்பு நிதி (PPF)

PPF திட்டத்தில் 5 லட்ச ரூபாயைப் பிரித்துத்தான் முதலீடு செய்ய முடியும். அதிகபட்சமாக ஒரு நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் வரை மட்டுமே முதலீடு செய்ய முடியும் என்பதால், 5 லட்சத்தை ஆண்டுதோறும் கீழ்க்கண்டவாறு பிரித்து முதலீடு செய்யலாம்:

1-வது ஆண்டு - ரூ.1,00,000

2-வது ஆண்டு - ரூ.1,00,000

3-வது ஆண்டு - ரூ.1,00,000

4-வது ஆண்டு - ரூ.1,00,000

5-வது ஆண்டு - ரூ.1,00,000

இவ்வாறு PPF விதிகளின்படி ஆண்டிற்கு ரூ.1 லட்சம் வீதம் 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால், 5-வது ஆண்டின் இறுதியில் 7.1% வட்டி விகிதத்தில் நமக்குக் கிடைக்கும் மொத்த வட்டி வருமானம் ரூ.1,17,134 ஆகும். இதன்மூலம் 5-வது ஆண்டில் கிடைக்கும் மொத்த முதிர்வுத் தொகை ரூ.6,17,134 ஆகும்.

எனினும், PPF என்பது 5 ஆண்டுத் திட்டம் கிடையாது. இதன் முதிர்வு காலம் 15 ஆண்டுகளாகும். 7-வது ஆண்டில் வேண்டுமானால் பகுதி பணத்தை எடுக்கலாம். ஒருவேளை ரூ.5 லட்சத்தை ரூ.1.5 லட்சம் எனப் பிரித்து முதலீடு செய்தால், 15-வது ஆண்டில் நமக்குக் கிடைக்கும் வட்டித் தொகை ரூ.7,91,338 ஆகும். இதன் மொத்த முதிர்வுத் தொகை ரூ.12,91,338 ஆகும்.

44
வரி சலுகைகள் (Tax Benefits)

PPF திட்டம் - முழுமையான வரி விலக்கு பெறக்கூடிய சிறந்த திட்டங்களில் PPF ஒன்றாகும். பிரிவு 80C-ன் கீழ் முதலீட்டுத் தொகைக்கு வரி விலக்கு உண்டு, ஈட்டப்படும் வட்டிக்கும் வரி கிடையாது. மேலும், 15 ஆண்டுகள் கழித்து கிடைக்கும் முதிர்வுத் தொகைக்கும் எந்த வரியும் செலுத்தத் தேவையில்லை.

NSC திட்டம் - இதில் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம். முதல் நான்கு ஆண்டுகளுக்கான வட்டி மீண்டும் முதலீடு செய்யப்படுவதாகக் கருதப்படுவதால் அதுவும் வரி விலக்கிற்கு உட்படும். ஆனால், 5-வது ஆண்டில் கிடைக்கும் வட்டி மற்றும் மொத்த முதிர்வுத் தொையின் போது கிடைக்கும் வட்டி வருமானம் ஆகியவை உங்களுடைய வருமான வரி வரம்பிற்கு (Income Tax Slab) ஏற்ப வரிக்கு உட்படும். ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு, 5 ஆண்டுகளில் நல்ல வட்டியுடன் அதனைத் திரும்பப் பெற விரும்பினால் உங்களுக்கு NSC திட்டம் சிறந்த தேர்வாகும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories