Monthly income Scheme
போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர வருமானத் திட்டம் என்பது ஒவ்வொரு மாதமும் வருமானம் நிலையான வருமானம் ஈட்டக்கூடிய திட்டமாகும். இத்திடத்தின் கீழ் தனிநபர்கள் அதிகபட்சம் ரூ.9 லட்சம் முதலீடு செய்யலாம். கூட்டுக் கணக்கு தொடங்கினால், அதிகபட்சம் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யலாம்.
Post Office monthly income Scheme
இத்திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்தின் முதிர்வுக் காலம் 5 ஆண்டுகள். அதற்குக் கிடைக்கும் வட்டியிலிருந்து சம்பாதிக்கலாம். உங்கள் டெபாசிட் தொகை முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். கூட்டுக் கணக்கு மூலம் இந்தத் திட்டத்தில் இருந்து ரூ.9,250 வரை சம்பாதிக்கலாம். இந்த திட்டம் ஓய்வு பெற்றவர்களுக்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. கணவனும் மனைவியும் சேர்ந்து முதலீடு செய்தால், அவர்கள் தங்களுக்கு ஒரு நிலையான மாத வருமானத்தை ஏற்பாடு செய்யலாம்.
Post Office Schemes
தற்போது, இத்திட்டத்தில் 7.4% வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. நீங்கள் கூட்டுக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால், 7.4 சதவீத வட்டி விகிதத்தில் ஒரு வருடத்தில் 1,11,000 ரூபாய் உத்தரவாதமான வருமானம் கிடைக்கும். மேலும் 5 ஆண்டுகளில் 1,11,000 x 5 = 5,55,000 ரூபாய் வட்டி மூலம் மட்டும் சம்பாதிப்பீர்கள். 1,11,000 ரூபாயை 12 பகுதிகளாகப் பிரித்தால், 9,250 ஆக இருக்கும். அதாவது ஒவ்வொரு மாதமும் 9,250 ரூபாய் வருமானம் கிடைக்கும்.
POMIS calculator
போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர வருமானத் திட்டத்தில் தனிநபர் கணக்கைத் திறந்து அதில் ரூ.9 லட்சத்தை டெபாசிட் செய்தால், ஒரு வருடத்தில் ரூ.66,600 வட்டியாகப் பெறலாம். ஐந்து வருடங்களில் வட்டியில் மட்டும் ரூ.66,600 x 5 = ரூ.3,33,000 சம்பாதிக்கலாம். இதன் மூலம், 5 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ரூ.5,550 வருமானம் கிடைத்துக்கொண்டே இருக்கும்.
Rs 9250 monthly income
தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தில் அனைவரும் கணக்கைத் தொடங்கலாம். பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் மூலம் குழந்தையின் பெயரிலும் கணக்கு தொடங்கலாம். குழந்தைக்கு 10 வயதாகும்போது, தானாகவே கணக்கைக் கையாளும் வசதியும் கிடைக்கும். இத்திட்டத்தில் முதலீடு செய்ய, போஸ்ப் ஆபிஸ் சேமிப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டும்.
MIS Scheme
போஸ்ட் ஆஃபீஸ் மாதாந்திர வருமானத் திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முன் பணத்தை எடுக்க வேண்டும் என்றால், ஒரு வருடம் கழித்து அந்த வசதி கிடைக்கும். அதற்கு முன் முதலீடு செய்த தொகையை திரும்பப் பெற முடியாது. ஒரு வருடம் முதல் மூன்று ஆண்டுகள் வரை முதலீட்டை திரும்ப எடுத்தால், டெபாசிட் தொகையில் 2% கழிக்கப்பட்டு திருப்பித் தரப்படும். மூன்று ஆண்டுகளுக்கு மேல் 5 ஆண்டுகளுக்கு முன்பு பணத்தை எடுக்க விரும்பினால், டெபாசிட் தொகையில் 1% கழிக்கப்பட்டு, மீதிப் பணம் திரும்பக் கிடைக்கும். 5 ஆண்டுகள் முடிந்த பிறகு, முழுத் தொகையையும் திரும்பப் பெறலாம்.
Post Office monthly income Scheme
5 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தத் திட்டத்தைத் தொடர விரும்பினால், நீட்டிக்கும் வசதி இல்லை. ஆனால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு, டெபாசிட் செய்த தொகையை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். பிறகு, மீண்டும் புதிய கணக்கைத் தொடங்கி இதே திட்டத்தில் மேலும் 5 வருடங்களுக்கு முதலீடு செய்யலாம்.