சொத்து வாங்க இதுதான் பெஸ்டு வழி! மத்திய அரசின் புதிய இணையதளம் பேங்க்நெட்!

First Published | Jan 4, 2025, 5:00 PM IST

Baanknet Portal: 'பேங்க்நெட்' என பெயரிடப்பட்ட இந்த போர்டல், அனைத்து பொதுத்துறை வங்கிகளின் மின்-ஏலமிடப்படும் சொத்துக்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்து ஒன்றாக வழங்கும்.

Baanknet Portal

நீங்கள் உங்கள் பட்ஜெட்டுக்குள் கிடைக்கும் சொத்தைத் தேடுகிறீர்களா? உங்களுக்காக மத்திய அரசு ஒரு புதிய வசதியை வழங்கியுள்ளது. இதற்கான புதிய ஆன்லைன் போர்ட்டலை மத்திய அரசு வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது. இந்த போர்ட்டலின் பெயர் பாங்க்நெட் (Baanknet).

Baanknet property

வங்கிகள் அல்லது பிற அரசு நிறுவனங்களால் பறிமுதல் செய்யப்பட்டு, மலிவாக ஏலம் விடப்படும் சொத்துக்களை இந்த இணையதளம் மின்னணு ஏலம் மூலம் விற்கும். இந்த சொத்துகளில் வணிக சொத்துக்கள், கடைகள், தொழில்துறை நிலங்கள் மற்றும் விவசாய மற்றும் விவசாயம் அல்லாத நிலங்கள் ஆகியவை அடங்கும்.

Tap to resize

Bank Asset Auction Network

இந்த பேங்க்நெட் போர்ட்டல் அனைத்து அரசு வங்கிகளிலிருந்தும் மின்-ஏலமிடப்படும் சொத்துகளை ஒரே இடத்தில் வாங்குவதற்கான வழியாக இருக்கும். ஏலத்தில் சொத்துக்களை வாங்குபவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்த போர்ட்டலில் பல்வேறு வகையான சொத்துக்களைப் பார்க்கலாம்.

Baanknet e-auction

பெரும்பாலும் வங்கிகள், அரசு நிறுவனங்கள் கடனை செலுத்தாத காரணத்தால் அல்லது வேறு சில காரணங்களுக்காக சொத்துகளைப் பறிமுதல் செய்கின்றன. அந்தச் சொத்துக்கள் மலிவாக விற்கப்படுகின்றன. ஆனால் அதைப் பற்றிய பொதுமக்களால் உடனடித் தகவல்களைப் பெற முடியாத நிலை இருந்தது. இப்போது இந்த போர்ட்டல் மூலம் அதைத் தெரிந்துகொள்வது சுலபம்.

What is Baanknet?

மலிவாக வாங்குவதற்கான வாய்ப்பு உள்ள சொத்துக்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் இந்தத் தளத்தில் அணுகலாம். இந்த பாங்க்நெட் போர்ட்டலில் 1 லட்சத்து 22 ஆயிரம் சொத்துக்கள் ஏலத்திற்கு உள்ளன. விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் சொத்துகளைச் சேர்ப்பதற்கு இது மிகவும் எளிதான வழியாகும்.

Baanknet website

பேங்க்நெட் போர்ட்டலை நிதிச் சேவைகள் செயலர் எம்.நாகராஜு வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். 'Baanknet' போர்ட்டல் போர்டல் அனைத்து பொத்துத்துறை வங்கிகளில் இருந்து மின்னணு ஏலத்தில் விற்கப்படும் சொத்துக்கள் பற்றிய தகவல்களை சேகரித்து ஒன்றாக வழங்கும் என நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

Baanknet Asset Auction

பொதுவாக வங்கிகளால் ஏலம் விடப்படும் சொத்துக்கள் மலிவான விலையில் இருக்கும். இப்போது அனைத்து அரசு வங்கிகளின் ஏலச் சொத்துக்ககளும் ஒரே இடத்தில் கிடைப்பது முதலீட்டாளர்களுக்கும் வீடு, வாகனம் போன்ற சொத்துகளை வாங்க விரும்பும் மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Latest Videos

click me!