ரூ.50,000 அள்ளிக்கொடுக்கும் மத்திய அரசு.. ஆதார் கார்டு இருந்தால் போதும்.. முழு விவரம் உள்ளே!

Published : Feb 10, 2026, 04:36 PM IST

ஆதார் கார்டு இருந்தால் மத்திய அரசு ரூ.50,000 வரை கடன் கொடுக்கிறது. இந்த கடன் யாருக்கெல்லாம் கிடைக்கும்? என்பது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
14
மத்திய அரசின் கடன் திட்டம்

பெண்கள், விவசாயிகள், இளைஞர்களின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்கு, விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இதே போல் சிறு வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கும் PM SVANidhi என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின்போது கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன.

24
வியாபாரிகளுக்கு ரூ.50,000 கடன் வழங்கப்படும்

அப்போது தெருவோர வியாபாரிகள் மற்றும் சிறு கடை உரிமையாளர்களுக்கு நிதி உதவி வழங்கிடும் வகையில் மத்திய அரசு இந்த திட்டத்தை தொடங்கியது. இந்த PM SVANidhi திட்டம் என்பது சிறு, குறு வியாபாரிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் மைக்ரோ கிரெடிட் திட்டமாகும். இந்த திட்டத்தின்படி சாலையோர வியாரிகள், சிறு கடை உரிமையாளர்களுக்கு குறைந்த வட்டியில் ரூ.50,000 வழங்கப்படும்.

34
மூன்று தவணைகளில் கடன் கிடைக்கும்

ஆனால் இந்த 50,000 ரூபாய் மொத்தமாக வழங்கப்படாது. முதல் தவணையாக ரூ.10,000 வழங்கப்படும். ஓராண்டு காலத்துக்குள் இதனை திருப்பி செலுத்தினால் இரண்டாம் தவணையாக ரூ.20,000 வழங்கப்படும். இதையும் உரிய காலத்துக்குள் கட்டி முடித்தவுடன் மூன்றாவது தவணையாக ரூ.50,000 வரை வியாபாரிகளுக்கு வழங்கப்படும்.

ஆண்டுக்கு 7% வட்டி மானியம் கிடைக்கும்

இந்த திட்டத்தில் மிகவும் சிறப்புவாய்ந்த அம்சம் என்னவென்றால் சரியான நேரத்தில் கடனை திருப்பி செலுத்தும் வியாபாரிகளுக்கு ஆண்டுக்கு 7% வட்டி மானியம் கிடைக்கும். இடுஹ் பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். மேலும் வியாபாரிகள் UPI மூலம் டிஜிட்டல் முறையில் வியாபாரம் செய்தால் மாதம் ரூ.100 வரை (ஆண்டுக்கு ரூ. 1,200 வரை) கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது.

44
யார் யாருக்கு கடன் கிடைக்கும்?

PM SVANidhi திட்டத்தின் செயல்திறனை அதிகரிக்கும் வகையில் இந்த திட்டத்துடன் UPI-இணைக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளும் அறிமுகம் செய்யப்பட உள்ளன. நகர்ப்புறங்களில் செயல்பட்டு வரும் தெருவோர வியாபாரிகள், முடிதிருத்தும் கடைகள் மற்றும் சலவைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட சிறு வியாபாரிகள் PM SVANidhi திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற முடியும். இந்த கடனை வங்கிகள் வழங்குகின்றன.

என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?

தகுதிவாய்ந்த வியாபாரிகள் அல்லது பயனாளிகள் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் அல்லது பிற அடையாள அட்டையை சம்பத்தப்பட்ட வங்கிகளில் சமர்பித்து கடன்களை வாங்கிக் கொள்ளலாம். எந்த பிணையமும் இன்றி கடன் எளிதாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories