காசு மிச்சம்.. ரயிலில் குழந்தைகளுக்கு 'இந்த' வயது வரை டிக்கெட் இலவசம்.. முழு விவரம் இதோ!

Published : Feb 10, 2026, 02:48 PM IST

Child Fare in Indian Railways: ரயிலில் குழந்தைகளுக்கு எந்த வயது வரை டிக்கெட் இலவசம்? எந்த வயது வரை பாதிக் கட்டணம் வசூலிக்கப்படும்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

PREV
14
இந்தியன் ரயில்வே டிக்கெட் ரூல்ஸ்

உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாக இந்தியன் ரயில்வே (Indian Railway) உள்ளது. நமது நாட்டில் தினமும் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயங்கி வருகின்றன. குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர். 

இந்திய ரயில்வே பயணிகளுக்கு ஏராளமான சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. அந்த வகையில் ரயிலில் குழந்தைகளுக்கும் டிக்கெட் கட்டண சலுகை (Child Fare in Railways) உள்ளது. ரயில்வேயின் லேட்டஸ்ட் விதிகள் (Railway Ticket Rules) குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

24
குழந்தைகளுக்கு ரயிலில் இலவசம்

உங்கள் செல்ல குழந்தைக்கு 5 வயது நிறைவடையவில்லை என்றால் அவர்களுக்கு ரயிலில் முழுக்க முழுக்க இலவசம் தான். நீங்கள் தனியாக டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் உங்கள் குழந்தைக்கு தனியாக பெர்த்தோ (Berth) இருக்கையோ (Seat) ஒதுக்கப்பட மாட்டாது. உங்கள் குழந்தைக்கு தனி பெர்த் வேண்டும் என விரும்பினால் அந்தக் குழந்தைக்கு பெரியவர்களுக்கான முழுக் கட்டணம் வசூலிக்கப்படும்.

34
இந்த வயது வரை குழந்தைகளுக்கு பாதி கட்டணம்

மேலும் 5 வயது முதல் 12 வயதுடைய உங்கள் குழந்தைக்கு பெர்த் வேண்டாம் என்றால் ரயிலில் பயணிக்க பாதிக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். அதே வேளையில் 5 வயது முதல் 12 வயதுடைய உங்கள் குழந்தைக்கு பெர்த் வேண்டும் என்றால் பெரியவர்களுக்கான முழு கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கான சலுகை கட்டணம் எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் என ரயில்களின் வகைகளை பொறுத்தும், ஸ்லீப்பர் கோச், ஏசி கோச் என பெட்டிகளின் வகைகளை பொறுத்தும் மாறுபடும். இதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

44
மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகை கிடைக்குமா?

ரயிலில் குழந்தைகளுக்கு 12 வயது வரை மட்டுமே மேற்கண்ட சலுகைகள் கிடைக்கும். 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் ரயிலில் முழு கட்டணமே வசூலிக்கப்படும். கொரோனாவுக்கு முன்பு வரை ரயிலில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு (Senior Citizen) டிக்கெட் கட்டண சலுகை இருந்து வந்தது. கொரோனாவின்போது நிதி நிலைமையை காரணம் காட்டி இந்த சலுகை நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories