PM Mudra Yojana Loan: முத்ரா கடன் யாருக்கெல்லாம் எவ்வளவு கிடைக்கும்? முழு விவரம்!

Published : Apr 08, 2025, 02:29 PM IST

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா எனப்படும் முத்ரா திட்டம் 10 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில்,  முத்ரா கடன் யாருக்கெல்லாம் எவ்வளவு கிடைக்கும்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.  

PREV
14
PM Mudra Yojana Loan: முத்ரா கடன் யாருக்கெல்லாம் எவ்வளவு கிடைக்கும்? முழு விவரம்!

PM Mudra Yojana Loan: சிறு குறு நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கும் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா எனப்படும் முத்ரா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்கள், தொழிலாளிகள், விவசாயிகள், கடின உடல் உழைப்பை பணியாக கொண்டவர்கள் என அனைவரையும் தொழில்முனைவோராக ஆக்கும் வகையில் மத்திய அரசு கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி இந்த திட்டத்தை கொண்டு வந்தது.

24
PM Mudra Yojana Loan

10 ஆண்டுகளை நிறைவு செய்த முத்ரா 

முத்ரா திட்டம் தொடங்கப்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரையிலான பிணை இல்லாத கடன்களை பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் வழங்குகின்றன. இதுமட்டுமின்றி கிராம வங்கிகளும், கூட்டுறவு வங்கிகளும் முத்ரா கடன்களை வழங்குகின்றன.

எவ்வளவு கடன் கிடைக்கும்?

முத்ரா கடன்கள் சிஷு, கிஷோர் மற்றும் தருண் என 3 பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. சிஷு பிரிவில் ரூ.50,000 வரையும், கிஷோர் பிரிவில் ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரையிலும், தருண் பிரிவில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும் கடன்கள் வழங்கப்படுகின்றன. இது தவிர தருண் பிளஸ் என்ற பிரிவும் உண்டு. இதற்கு முன் வாங்கிய கடன்களை குறிப்பிட்ட காலத்துக்குள் முழுமையாக செலுத்தி இருந்தால் தருண் பிளஸ் பிரிவில் ரூ.20 லட்சம் வரை கடன் வாங்கிக் கொள்ள முடியும்.

UPI கிரெடிட் லோன்: இப்போது நீங்கள் யுபிஐ மூலம் கடன் பெறலாம்!
 

34
Who can get Mudra Loan?

விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

பெண்கள் உள்பட எந்த ஒரு தனிநபரும், கூட்டு நிறுவனம் மற்றும் தனியுரிமை நிறுவனம் முத்ரா கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 65 வயது உடையவர்கள் வரை பிரதான் மந்திரி முத்ரா யோஜனா கடன்களுக்கு விண்ணபிக்க தகுதியானவர்கள். இந்த கடன்களுக்கு பாதுகாப்பு அல்லது வேறு எந்த அடமானமும் தேவையில்லை என்பது தான் இதன் சிறப்பம்சமாகும். அடையாளச் சான்று, குடியிருப்புச் சான்று, விண்ணப்பப் படிவம், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவை இந்த கடனுக்கு விண்ணபிக்க தகுதியான ஆவணங்கள் ஆகும்.
 

44
10 years of Mudra Yojana

எந்தெந்த காரணங்களுக்கு கடன் கிடைக்கும் 

கடைக்காரர்கள், வர்த்தகர்கள், விற்பனையாளர்களின் தொழில் கடன்கள். சிறு வணிக நிறுவனங்களுக்கான உபகரண நிதி, ஆட்டோ உள்ளிட போக்குவரத்து வாகனங்களுக்கான கடன்கள், கோழி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, மீன் வளர்ப்பு போன்ற விவசாயம் சார்ந்த விஷயங்கள், சிறு கடைகள், தண்ணீர் கேன் பிஸ்னஸ், வணிக நோக்கங்களுக்காக டிராக்டர்கள் அல்லது இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துதல் என இந்த காரணங்களை குறிப்பிட்டு முத்ரா கடன்களை வாங்கிக் கொள்ள முடியும். முதரா கடனின் வட்டி விகிதம் குறைவாகத் தான் இருக்கும். ஆனால் அந்தந்த வங்கிகள், தனியார் நிறுவனங்களை பொறுத்து இது மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

52 கோடிக்கும் அதிகமான கடன்கள் 

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் தொடங்கி இன்றுடன் 10 ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், 10 ஆண்டுகளில் மொத்தம் ரூ.32.61 லட்சம் கோடி மதிப்பிலான 52 கோடிக்கும் அதிகமான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

Gold and Crude Oil: தங்கத்தின் விலையை கச்சா எண்ணெய் நிர்ணயம் செய்வது எப்படி?
 

Read more Photos on
click me!

Recommended Stories