Petrol Price Hike: மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை..! அலரும் வாகன ஓட்டிகள்..

Published : May 19, 2026, 08:49 AM IST

Petrol and Diesel Price Hike | கச்சா எண்ணை விலை உயர்ந்து வருவதால் இந்தியாவில் இன்று மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் நிகழ்ந்த இரண்டாவது விலை உயர்வு என்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

PREV
14
வாகன ஓட்டிகளின் தலையில் இடியை இறக்கிய எண்ணை நிறுவனங்கள்

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டிருப்பது வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

24
எவ்வளவு உயர்ந்தது?

மே 19, 2026 முதல் அமலுக்கு வந்த புதிய விலைப்படி, பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு சுமார் 90 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு மே 15ஆம் தேதி லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது, ஒரு வாரத்திற்குள் மொத்தமாக ரூ.4 வரை எரிபொருள் விலை உயர்ந்துள்ளது.

முக்கிய நகரங்களில் புதிய விலை

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 82 காசுகள் உயர்ந்து ரூ.104.49க்கும், டீசல் லிட்டருக்கு 86 காசுகள் உயர்ந்து ரூ.96.11க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற நகரங்களிலும் விலை அதிகரித்துள்ளது. மாநில வாரியான வரி (VAT) மற்றும் உள்ளூர் கட்டணங்களின் காரணமாக ஒவ்வொரு நகரத்திலும் விலை மாறுபடுகிறது.

34
ஏன் இந்த திடீர் விலை உயர்வு?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேற்காசிய பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம் மற்றும் ஹோர்முஸ் கடல்சுரங்கப் பாதையில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக உலகளவில் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இந்தியா தனது தேவைக்கான பெரும்பாலான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதால், அதன் தாக்கம் நேரடியாக உள்நாட்டு விலைகளில் பிரதிபலிக்கிறது.

எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு

இந்தியன் ஆயில், பிபிசிஎல், ஹெச்பிசிஎல் போன்ற அரசு எண்ணெய் நிறுவனங்கள் நீண்டகாலமாக விலையை மாற்றாமல் வைத்திருந்ததால் பெரிய அளவில் இழப்புகளை சந்தித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தினசரி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.

44
அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும்?

பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது வெறும் வாகன ஓட்டிகளையே அல்லாமல் அனைத்து மக்களையும் பாதிக்கும். சரக்கு போக்குவரத்து செலவு அதிகரிப்பதால் காய்கறி, மளிகை பொருட்கள், பால், பேருந்து கட்டணம் உள்ளிட்ட பல துறைகளிலும் விலை உயர்வு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மகாராஷ்டிராவில் அரசு பேருந்து கட்டண உயர்வும் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் விலை உயருமா?

சர்வதேச கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்தால், எதிர்காலத்தில் மேலும் விலை உயர்வு ஏற்படலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இருப்பினும், நாட்டில் போதுமான எரிபொருள் கையிருப்பு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories