Petrol Diesel Price: குட்நியூஸ்! ஒரு வழியாக பெட்ரோல் டீசல் விலை குறைகிறது! எப்போது? எவ்வளவு தெரியுமா?

First Published | Oct 23, 2024, 11:49 PM IST

Petrol Diesel Price: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், பிரேசில், கயானா போன்ற நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் விநியோகம் தொடர்வதால் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. முதலில் மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இம்முறை மாற்றியமைக்கப்பட்டு தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது. இந்த விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது.  

இது சர்வதேச சந்தையின் நிலவரத்திற்கு ஏற்க பெட்ரோல், டீசல் விலை அமைய வழிவகுக்கும் என கூறப்பட்டது. ஆனால் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை அதிகரித்தை தவிர விலை குறையவில்லை. கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்த போதும் பெட்ரோல் டீசல் விலை குறையவில்லை. இதனிடையே உலக நாடுகளுக்கு தேவையான பெட்ரோலிய பொருட்களுக்கான கச்சா எண்ணெய்யை ஈரான், ஈராக் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும், உக்ரைன், ரஷ்யா போன்ற நாடுகளும் வழங்கி வருகின்றன. 

Tap to resize

ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் ஈரான்-இஸ்ரேல் இடையே போர் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. இரு நாடுகளும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன் காரணமாக ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி, வரும் நாட்களில் பெருமளவு சரியும் என்பதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக உயரத் தொடங்கியுள்ளது. ஆகையால் பெட்ரோல், டீசல் குறைய வாய்ப்பில்லை எனவே கூறப்பட்டு வந்தது. 

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளது என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இஸ்ரேல் ஈரான் இடையே போர் ஏற்பட்டாலும் உலகில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படவில்லை. பிரேசில், கயானா போன்ற நாடுகளிலிருந்து சர்வதேச சந்தைக்கு கச்சா எண்ணெய் விநியோகம் தொடர்ந்து வருகிறது. எனவே பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி தொடர்ந்து நிலையாக இருக்கும் என்பதால் வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார். 

கடைசியாக மார்ச் மாதம் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 குறைக்கப்பட்டதை அடுத்து தொடர்ந்து 220  நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடிப்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos

click me!