Published : Oct 23, 2024, 04:48 PM ISTUpdated : Oct 23, 2024, 04:53 PM IST
Anand Srinivasan: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,500 வரை உயர வாய்ப்புள்ளதாகவும், தங்கம் வாங்க இதுவே சரியான நேரம் என்றும் தெரிவித்துள்ளார்.
தங்கத்தை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. குறிப்பாக பெண்களுக்கு சொல்லவே வேண்டாம். இந்நிலையில் தங்கம் விலை செப்டம்பர் மாதத்தில் ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் அக்டோபர் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை குறைந்ததை விட ஜெட் வேகத்தில் உயர்ந்தே அதிகம். குறிப்பாக கடந்த வாரத்தில் மட்டும் 2000 ரூபாய் அளவுக்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது.
25
Today Gold price
இந்நிலையில் தங்கம் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். போற போக்கை பார்த்தால் தங்கம் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டு விடுமோ என்று பொதுமக்கள் புலம்பும் அளவுக்கு விலை உச்சத்தில் உள்ளது. அதாவது நேற்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் தங்கம் கிராம் ரூ.7,300க்கும், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,964க்கு விற்கப்பட்டது. இன்று தங்கம் விலை கிராம் ரூ.40 உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் ரூ.7,340க்கும் 24 கேரட் தங்கம் உயர்ந்து ரூ.8,007க்கும் விற்பனையாகிறது.
இந்நிலையில் தீபாவளிக்கு பிறகு தங்கம் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்த பொதுமக்களுக்கு பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன்
அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
45
Anand Srinivasan
இதுதொடர்பாக ஆனந்த் சீனிவாசன் யூடியூப் வீடியோவில்: கடந்த சில நாள்களாகவே தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் ஏறி வருகிறது. இந்த முறை தீபாவளிக்கு ராக்கெட் இல்லை தங்கம் தான். கடந்த ஒரு வாரத்தில் ஒரு முறை கூட குறையவில்லை. 24 கேரட் மற்றும் 22 கேரட் தங்கம் வரும் நாட்களில் ரூ.1000 வரை உயர வாய்ப்புள்ளது. எனவே, யாராவது தங்கம் வாங்க வேண்டும் என்று நினைத்தால் இதுவே சரியான நேரம்.
இனி தலைப்பே தங்கம் விலை ரூ.8,000 என்று வைத்துவிடுவார்கள். ரூ.8,500 வரை 24 கேரட் தங்கம் உயரும் வாய்ப்பு உள்ளது. இனிமேல் தங்கம் ரூ.8,000க்கு கீழ் கிடைக்காது. 22 கிராம் தங்கம் ஏற்கனவே ரூ.7,964க்கு விற்கிறது. அதற்கு மேல் ஜிஎஸ்டி, செய்கூலி சேர்த்தால் ரூ.8,000 தாண்டி விடுகிறது. அதனால, தங்கம் வாங்க வேண்டும் என்று நினைத்தால், இதுதான் சரியான நேரமாக இருக்கும். அதற்குப்பிறகு ரூ.8000க்குள் ஒரு கிராம் கிடைக்குமா என்று எனக்குத் தெரியவில்லை என கூறியிருப்பது நகைப்பிரியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.