இந்தியாவில் செல்லப்பிராணிகளை வளர்ப்போரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், பெட் மற்றும் பெட் ஆக்சஸரீஸ் விற்பனை தற்போது லாபகரமான சிறு தொழிலாக மாறியுள்ளது. குறிப்பாக நகரங்கள் மற்றும் வளர்ந்து வரும் டவுன் பகுதிகளில் நாய்கள், பூனைகள் போன்ற செல்லப்பிராணிகளுக்கான சிறப்பு உணவுகள், விளையாட்டு பொருட்கள், ஷாம்புகள், பெட்கள், காலர்கள் மற்றும் உடைகள் வாங்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதனால், குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடிய இந்தத் துறையில் இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.