8% interest on Pension delays
அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், வங்கி ஓய்வூதியத் தொகையைச் செலுத்த வேண்டிய தேதியிலிருந்து ஆண்டுக்கு 8% வட்டி கொடுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. ஓய்வூதியம் மற்றும் நிலுவைத் தொகையை தானாகவே வழங்க வேண்டும் என்றும், ஓய்வூதியதாரர்கள் இழப்பீடு கோரும் நிலை இருக்கக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
Compensation for pensions
மேலும், அக்டோபர் 1, 2008 முதல் தாமதமாக செய்யப்பட்ட அனைத்து ஓய்வூதிய பரிவர்த்தனைகளுக்கும் வங்கி ஓய்வூதியதாரரிடம் இருந்து எந்த கோரிக்கையும் இல்லாமல் இழப்பீடு தானாகவே ஓய்வூதியதாரரின் கணக்கில் செலுத்த வேண்டும்.
Pension-paying banks
ஓய்வூதிய நிலுவைத் தொகை செலுத்தப்பட்டால், அரசு ஊழியர்கள் அடுத்த மாதத்தில் ஓய்வூதியத்துடன் தங்கள் நிலுவைத் தொகையைப் பெறுவதை உறுதி செய்வதற்காக, ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளிடமிருந்து உத்தரவுகளின் நகல்களை உடனடியாகப் பெறுமாறு வங்கிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன.
Payment of pension arrears
ஓய்வூதியக் கணக்கீடுகள் பற்றிய விவரங்களை தங்கள் வலைத்தளங்களில் வெளியிடுவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கி கிளைகளிலும் அவ்வப்போது இதே போன்ற ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதற்காக போதுமான விளம்பரமும் செய்யப்பட வேண்டும்.
Pension calculations
ஓய்வூதியம் வழங்கும் அனைத்து ஏஜென்சி வங்கிகளும், ஓய்வூதியதாரர்களுக்கு, குறிப்பாக வயதான ஓய்வூதியதாரர்களுக்கு, அக்கறையுடனும் அனுதாபத்துடனும் கூடிய வாடிக்கையாளர் சேவையை வழங்குமாறு ரிசர்வ் வங்கி தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.