பொதுவாக, கூகுள் பே டெபிட் கார்டுகளுடன் மட்டும் இணைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் உங்களிடம் ரூபே கிரெடிட் கார்டு (RuPay Credit Card) இருந்தால், கிரெடிட் கார்டு மூலமாகவும் யுபிஐ கட்டணத்தைச் செலுத்தலாம்.
26
Google Pay Logo
இப்போது பல வங்கிகளில் ரூபே கிரெடிட் கார்டுகள் (Credit Cards) கிடைக்கின்றன. எஸ்பிஐ, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பிஎன்பி, ஆக்சிஸ் வங்கி போன்ற முன்னணி வங்கிகள் மட்டுமின்றி, பல பிராந்திய மற்றும் கூட்டுறவு வங்கிகளும் வழங்குகின்றன.
36
UPI பரிவர்த்தனைகளுக்கு உங்கள் RuPay கிரெடிட் கார்டைப் பயன்படுத்த விரும்பினால், முதலில் உங்கள் ஜிமெயில் ஐடி மூலம் Google Pay இல் பதிவு செய்துகொள்ளுங்கள். தொடர்ந்து கார்டை இணைப்பதற்கு பின்வரும் வழிமுறையைப் பின்பற்றவும்.
46
Google Pay செயலியைத் திறந்து, புரொஃபைப் புகைப்படத்தின் மீது கிளிக் செய்து Payment Methods பகுதிக்குச் சென்று, Add RuPay Credit Card என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் வங்கியைத் தேர்ந்தெடுத்து உங்கள் கார்டு விவரங்களை டைப் செய்யவும். (CVV , எண், காலாவதி தேதி)
56
தேவையான கார்டு விவரங்களை டைப் செய்த பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP ஐ அதற்குரிய இடத்தில் நிரப்பி, சமர்ப்பிக்கவும். இப்போது, UPI பரிவர்த்தனைகளுக்கான PIN ஐ உருவாக்கலாம். அதனை இரண்டு முறை சரியாக டைப் செய்து உறுதிபடுத்தவும்.
66
இதன் மூலம் உங்கள் RuPay டெபிட் கிரெடிட் கார்டு கூகுள் பேயில் இணைக்கப்பட்டுவிடும். இனி, கூகுள் பே செயலியில் QR குறியீடுகள், UPI ஐடிகள் மூலம் UPI மூலம் பணம் செலுத்தலாம். ஆன்லைன் ஷாப்பிங் செய்யவும் இதனைப் பயன்படுத்தலாம்.