Paytm வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஆகஸ்ட் 31 கடைசி தேதி.. முழு விபரம்

Published : Aug 17, 2025, 08:43 AM IST

பேடிஎம் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை வெளியாகி உள்ளது. இதனை ஆகஸ்ட் 31க்குள் செய்யவில்லை என்றால், குறிப்பிட்ட வசதிகள் கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
15
பேடிஎம்

ஆகஸ்ட் 31க்குள் பேடிஎம் பயனர்கள் ஒரு முக்கிய நடவடிக்கை எடுக்க வேண்டும். செப்டம்பர் 1 முதல் பெரிய சிக்கல்கள் வரலாம். இந்தியாவில் கோடிக்கணக்கானவர்கள் காப்பீட்டு தவணைகள், Netflix, Amazon Prime, Spotify போன்ற OTT சந்தாக்கள் மற்றும் பிற ஆட்டோ-பே வசதிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், பழைய @paytm UPI handle முற்றிலும் நிறுத்தப்படுவதால், இவை அனைத்தும் திடீரென செயலிழக்கும் அபாயம் அதிகம்.

25
புது நடைமுறை

இந்த நிறுத்தத்திற்கு காரணம் கடந்த ஆண்டு RBI, பேடிஎம் Payments Bank மீது சில முறைகேடுகள் கண்டறிந்து @paytm handleஐ தடை செய்தது. அதன் பிறகு, NPCI (National Payments Corporation of India) அனைத்து பயனர்களும் தங்கள் ஆட்டோ-பேவை வேறு வங்கிகளுக்கு மாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இன்னும் பலர் மாறவில்லை என்பதால், ஆகஸ்ட் 31 இறுதி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இரண்டாவது முறை நீட்டிப்பு ஆகும். இனி வேறு வாய்ப்பு இருக்காது.

35
ஆட்டோ-பே

அப்படியானால், வாடிக்கையாளர்கள் உடனே என்ன செய்ய வேண்டும்? என்பதை பார்க்கலாம். முதலில், உங்கள் அனைத்து ஆட்டோ-பே அமைப்புகளையும் சரிபார்க்க வேண்டும். காப்பீடு, கடன் EMI, OTT சந்தா என எதிலாவது @paytm handle இருந்தால், உடனே ரத்து செய்ய வேண்டும். பிறகு, புதிய வங்கி (எ.கா. SBI, HDFC, ICICI, PhonePe, அல்லது பேடிஎம்-Yes Bank) மூலம் மீண்டும் ஆட்டோ-பே ஆத்தரீஸ் செய்ய வேண்டும். நினைவில் கொள்ளுங்கள். வங்கிகள் அல்லது நிறுவனங்கள் உங்கள் ஒப்புதலின்றி மாற்ற முடியாது.

45
கிரெடிட் ஸ்கோர்

வருடத்திற்கு சுமார் ரூ.14,000 கோடி மதிப்புள்ள காப்பீட்டு தவணைகள் அடைக்கப்படாமல், காப்பீட்டு பாலிசி ரத்து ஆவதற்கான அபாயம் உள்ளது. Netflix, Amazon Prime, Spotify போன்ற OTT சேவைகள் திடீரென நிறுத்தப்படலாம். கடன் EMI அல்லது கிரெடிட் கார்டு கட்டணம் தவறினால், அபராதமும், உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறையும் ஆபத்து உள்ளது.

55
பேடிஎம் செயலி

எனவே, பேடிஎம் செயலியை பயன்படுத்தும் அனைவரும், ஆகஸ்ட் 31க்குள் அவசியமான மாற்றங்களைச் செய்ய வேண்டும். இல்லையெனில் காப்பீட்டு நிறுவனம் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும், சந்தா சேவைகள் நிறுத்தப்படும், கையால் செலுத்தும் சிரமம் ஏற்படும். அதனால், கடைசி நேரம் வருவதற்குள் பாதுகாப்பாக உங்கள் ஆட்டோ-பேவை புதிய வங்கிக்கு மாற்றுவது மட்டுமே நல்ல தீர்வு ஆகும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories