இந்திய ரயில்வேயில் பயணம் செய்வோருக்கு 45 பைசாவில் 10 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டு நிவாரணம் வழங்கும் ரயில் பயண காப்பீடு திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
இந்திய ரயில்வேயில் பயணம் செய்வோருக்கான மிகச் சிறந்த பாதுகாப்பு வாய்ப்பாக ரயில் பயண காப்பீடு வழங்கப்படுகிறது. வெறும் 45 பைசா செலுத்தினாலே, பயணிகள் 10 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டு நிவாரணம் பெறலாம். ரயில் விபத்துகள், மோதல், தடம் புரளுதல் போன்ற அசம்பாவிதங்களில் பயணிகள் மற்றும் குடும்பத்தினர் நிதி நெருக்கடியில் சிக்காமல் இருக்க இந்த திட்டம் உதவுகிறது.
25
இந்திய ரயில்வே பயண காப்பீடு
இந்த காப்பீடு ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்யும்போதே மட்டுமே கிடைக்கும். IRCTC இணையதளம் அல்லது மொபைல் ஆப்பில் டிக்கெட் பதிவு செய்யும் போது காப்பீட்டு விருப்பத்தை தேர்வு செய்தால் போதும். கவுன்டரில் வாங்கப்படும் டிக்கெட்டுகளுக்கும், பொதுவான (ஜெனரல்) வண்டிகளில் பயணம் செய்வோருக்கும் இந்த திட்டம் பொருந்தாது.
35
ரயில் டிக்கெட் முன்பதிவு
டிக்கெட் பதிவு செய்ததும், பயணியின் மொபைல் அல்லது மின்னஞ்சலுக்கு காப்பீட்டு நிறுவனத்திலிருந்து லிங்க் வரும். அதில் nominee விவரங்களை நிரப்ப வேண்டும். பயணத்தின் முழு நேரமும் (train ஏறுதல் முதல் இறங்கும் வரை) காப்பீடு செல்லும். பயணியின் மரணம் நேரிட்டால் குடும்பத்தினர் ரூ.10 லட்சம் பெறுவர்.
முழு நிரந்தர மாற்றுத்திறனாளியாக ஆனால் ரூ.7.5 லட்சம், காயங்களுக்கான மருத்துவ செலவுக்கு ரூ.2 லட்சம், உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல ரூ.10,000 வழங்கப்படும். இந்த திட்டம் உறுதி செய்யப்பட்ட (Confirmed) அல்லது RAC டிக்கெட்டுடன் உள்ள இந்திய குடிமக்கள் மட்டுமே பெறக்கூடியது. 5 வயதுக்குக் குறைந்த குழந்தைகள், வெளிநாட்டு குடிமக்கள், ஜெனரல் பயணிகள் இதில் சேர முடியாது.
55
காப்பீடு திட்டம்
ரயில் மோதல், தடம் புரளுதல், கொள்ளை, தீவிரவாத தாக்குதல், கலவரம், ரயிலிலிருந்து தவறி விழுதல் போன்றவை. ஆனால் தனிப்பட்ட விபத்து (எ.கா: தற்கொலை, தனிப்பட்ட சொத்து இழப்பு) இதில் சேராது. மிகக் குறைந்த செலவில் பெரும் பாதுகாப்பு தரும் இந்த ரயில் பயண காப்பீடு, ஒவ்வொரு பயணியுமே கவனிக்க வேண்டிய அவசியமான வசதி ஆகும்.