உங்ககிட்ட PhonePe, Google Pay, Paytm இருக்கா.. அக்டோபர் 1 முதல் இது முடியாது

Published : Aug 16, 2025, 03:21 PM IST

இனி UPI-யில் பணம் கேட்க முடியாது. PhonePe, GPay, Paytm பயனர்களுக்கு இதுவொரு எச்சரிக்கை ஆகும்.மோசடிகளைத் தடுக்க NPCI இந்த முடிவை எடுத்துள்ளது.

PREV
15
யுபிஐ பரிவர்த்தனை

அக்டோபர் 1, 2025 முதல் போன்பே, கூகுள் பே, பேடிஎம் போன்ற பிரபலமான UPI ஆப்ஸ்களை பயன்படுத்தும் பயனர்கள் இனி இதை செய்ய முடியாது. தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) வெளியிட்ட புதிய அறிவுறுத்தலின் படி, இந்த வசதி முற்றிலும் நிறுத்தப்பட உள்ளது.

25
அக்டோபர் 1 முதல் மாற்றம்

என்பிசிஐ ஜூலை 29 அன்று வெளியிடப்பட்டது செய்து, அக்டோபர் 1க்கு பிறகு எந்தவொரு P2P வசூல் பரிவர்த்தனை-ஐயும் செயல்படுத்தக்கூடாது" என்று தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இனிமேல் UPI ஆப்களில் பணம் கேட்கும் வசதி முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

35
என்பிசிஐ அதிரடி முடிவு

முன்பு, ஒருவர் மற்றவரிடம் ஒரே பரிவர்த்தனையில் அதிகபட்சம் ரூ.2,000 வரை கோரிக்கையை அனுப்பலாம். ஒரு நாளில் 50 பரிவர்த்தனை வரம்பு இருந்தது. ஆனால் இந்த வசதியை மோசடி செய்பவர்கள் அடிக்கடி தவறாக பயன்படுத்தியதால், என்பிசிஐ (NPCI) கடுமையான முடிவெடுத்து, அதை முற்றிலும் நீக்க முடிவு செய்யப்பட்டது.

45
டிஜிட்டல் மோசடி தடுப்பு

இந்த மாற்றம் மூலம் இனிமேல் எல்லா UPI பரிவர்த்தனைகளும் பயனர் தாமாகவே தொடங்க வேண்டியதாக இருக்கும். அதாவது, பணம் அனுப்ப விரும்புபவர் தான் QR கோடு ஸ்கேன் செய்வது அல்லது UPI ஐடி உள்ளிடுவது போன்ற முறையில் பரிவர்த்தனையை தொடங்க வேண்டும்.

55
டிஜிட்டல் பண பரிமாற்றம்

இதனால் பண பரிமாற்றத்தில் பயனருக்கு முழு கட்டுப்பாடு இருக்கும். நிதி சேவை நிறுவனங்களின் வல்லுநர்கள் கூறுவதுபோல், இந்த மாற்றம் மோசடிகளை பெருமளவில் குறைக்கிறது. அதேசமயம், பயனர்களுக்கு பாதுகாப்பான, நம்பகமான, வெளிப்படையான UPI பரிவர்த்தனையை உறுதி செய்யும்.

Read more Photos on
click me!

Recommended Stories