ஜியோ ஹாட்ஸ்டார் தனது சந்தாதாரர் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தி நெட்ஃபிளிக்ஸுக்கு கடும் போட்டியை அளித்து வருகிறது. ஐபிஎல் போட்டிகள் மற்றும் ஜியோ சினிமாவுடன் இணைந்தது போன்ற காரணிகள் இதற்கு முக்கிய பங்காற்றியுள்ளன.
வீட்டில் இருந்தபடியே புதிய சினிமாக்களை குடும்பத்துடன் அமர்ந்து சந்தோஷமாக பார்த்து மகிழ உதவி செய்து வருகிறன்றன ஓடிடி தளங்கள். இந்த தளங்கள் மேல்தட்டு மக்களை மட்டுமல்லாமல் அடித்தட்டு மக்களையும் அப்படியே கட்டுப்போட்டுள்ளது. மேலும் இவற்றை செல்போன்களிலும் பார்த்து மகிழலாம் என்பதால் ஸ்மார்ட் போன்கள் வைத்திருக்கும் பெரும் பாலானோர் ஓடிடி தளங்களில் உறுப்பினராகி வருகின்றனர்.
28
Jiohotstar vs Netflix
Jiohotstar தற்போது Netflix தளத்திற்கு கடும் போட்டியாக மாறியுள்ளது. இரண்டு ஓடிடி தளங்களும் போட்டிப்போட்டுக்கொண்டு புதிய சினிமா மற்றும் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பு செய்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு இரண்டு தளங்களையும் பார்த்து வருகின்றனர்.
38
30 கோடியாக உயர்ந்த சந்தாதார்கள்
ஜியோ ஹாட்ஸ்டார் இப்போது அது உலகின் மிகப் பெரிய ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றான நெட்ஃபிளிக்ஸை நெருங்கும் அளவிற்கு வளர்ந்து விட்டது. ஜியோ ஹாட்ஸ்டார் கடந்த சில மாதங்களில் மட்டும் தனது சந்தாதாரர் எண்ணிக்கையை 5 கோடியிலிருந்து 30 கோடியாக உயர்த்தி, மிகப்பெரிய சாதனை புரிந்துள்ளது. இது,நெட்ஃபிளிக்ஸின் தற்போதைய 30.16 கோடி சந்தாதாரர் எண்ணிக்கையை நெருங்கியுள்ளது.
இந்த பெரும் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக, ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமா தளங்கள் இணைந்து IPL 2025 போட்டிகளை நேரலையில் வழங்கியதைக் குறிப்பிடலாம். டிஜிட்டல் வழியாக மட்டும் 65.2 கோடி பார்வையாளர்கள் இந்த சீசனை பார்த்துள்ளனர். இது போல தொலைக்காட்சியில் மட்டும் 53.7 கோடி பேர் பார்த்துள்ளனர்.
58
மெதுவாக காய் நகர்த்திய ஜியோ
ஐபிஎல் போட்டிகளின் வெற்றி, டிஜிட்டல் பார்வைகள் அதிகரிப்பு, மற்றும் புதிய சந்தாதாரர்கள் சேர்தல் – இவை மூன்றும் ஜியோ ஹாட்ஸ்டாரின் வளர்ச்சிக்கு பெரிய பங்களிப்பாக அமைந்துள்ளன. குறிப்பாக, பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையேயான இறுதிப்போட்டியை மட்டும் 23.7 கோடி பேர் ஜியோ ஹாட்ஸ்டார் மூலம் பார்த்துள்ளனர்.இது மட்டுமல்ல, ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் கடந்த பிப்ரவரியில் இணைந்ததைத் தொடர்ந்து பார்வையாளர்களின் எண்ணிக்கையும், அதன் வழியே வருமானமும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
68
இணைப்பால் கிடைத்த பலன்
2022-ஆம் ஆண்டில், டிஸ்னி ஸ்டார் நிறுவனம் ஐபிஎல் போட்டிகளுக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பை ரூ. 23,575 கோடிக்கு வாங்கியது. அதே நேரத்தில், டிஜிட்டல் ஒளிபரப்பை ரிலையன்ஸின் வயாகாம் 18 நிறுவனம் ரூ. 20,500 கோடிக்கு பெற்றது. இப்போது இந்த இரண்டு நிறுவனங்களும் ஒரு கூட்டுப் பங்குதாரிகள் ஆகி, பலத்த போட்டியை உருவாக்கி உள்ளன.
78
முதல் இடத்தில் நெட்ஃபிளிக்ஸ்
முக்கியமாக, நெட்ஃபிளிக்ஸின் வளர்ச்சியும் கணிசமாகவே உள்ளது. 2024 டிசம்பர் நிலவரப்படி, 190 நாடுகளில் 30.16 கோடி சந்தாதாரர்கள் இருந்துள்ளனர். 2023 இறுதிக் காலாண்டில் மட்டும் 1.8 கோடிக்கு மேற்பட்டோர் புதிய சந்தாதாரர்களாக இணைந்துள்ளனர்.
88
போட்டி போடும் ஜியோ ஹாட்ஸ்டார்
இவ்வளவு மாபெரும் வளர்ச்சியுடன், ஜியோ ஹாட்ஸ்டார் தன்னை இந்தியாவின் மட்டும் அல்லாது, உலகத்தின் முக்கிய ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றாக நிறுவிக்கொண்டுள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் மீடியா எதிர்காலம் வேகமாக வளர்ந்து வருகிறது என்பது இதன்முலம் தெளிவாகிறது.