ஆன்லைன் காப்பீடு - கவனம் தேவை: இத்தனை விஷயங்கள் இருக்கா?

Published : May 31, 2025, 04:48 PM IST

ஆன்லைனில் காப்பீடு வாங்குவது விலை குறைவு மற்றும் வசதியானது என்றாலும், சில குறைபாடுகளும் உள்ளன. முதலீட்டு ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்து, உங்கள் தேவைகளுக்கு ஏற்ற பாலிசியைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.

PREV
15
ஆன்லைன் காப்பீடு எடுக்கலாமா?

சினிமா, பேருந்து மற்றும் ரயில் டிக்கெட் வாங்குவதை போல் இப்போது ஆன்லைனில் இன்ஷூரன்ஸ் பாலிசியும் விற்கப்படுகிறது. ஆன்லைனில் பாலிசி எடுப்பதால் பாலிசிதாரருக்கு நல்லது இருப்பதை போல ஒரு சில பிரச்சினைகளையும் எதிர்கொள்ளவேண்டி வரும். விலை சரிவு என்பதைவிட நாமே தேவையானவற்றை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

25
இதெல்லாம் பிளஸ்

நாம் ஏஜென்ட்களிடமிருந்து வாங்குவதை விட ஆன்லைனில் பாலிசி வாங்கும்போது பிரீமியம் குறைவாகவே இருக்கும். மேலும் யூலிப் பாலிசிகளில் அதிகளவிலான யூனிட்கள் கிடைக்கும் என்பதும் உண்மையே. காரணம் இதில் ஏஜென்ட் கமிஷன் இல்லை; அலுவலகம், மேலாளர்கள் என பெரிய பராமரிப்புச் செலவுகள் எதுவுமே இல்லை. இரண்டாவது, 24 மணி நேரமும் இந்த பாலிசிகளை ஆன்லைனில் வாங்கலாம். தவிர, செக் கொடுக்க, கையெழுத்து போட என எதற்கும் இன்ஷூரன்ஸ் அலுவலகத்துக்குப் போகத் தேவையில்லை. மேலும் அனைத்து இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் ஆன்லைன் பாலிசிகளையும் ஒரே இணையதளத்தில் சில தனியார் நிறுவனங்கள் வைத்துள்ளன. இந்த இணையதளங்களில் அனைத்து பாலிசிகளையும் ஒப்பிட்டுப் பார்த்து பாலிசிகளை எளிதாக வாங்கலாம்.

35
இதெல்லாம் மைனஸ்

பல நிறுவனங்களின் ஆன்லைன் பாலிசிகளை இணையதளத்தில் முழுமையாக ஒப்பீடு செய்யவது எளிதாக இருக்காது. பிரீமியத் தொகைகள் சில இணைய தளங்களில் தவறாக இருக்கிறது என்றும் எல்லா இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் தங்களுடைய அனைத்துப் பாலிசிகளையும் ஆன்லைனில் கொண்டு வரவில்லை எனவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சில நிறுவனங்கள் சில முக்கியமான பாலிசிகளை மட்டுமே ஆன்லைனில் கொண்டு வந்திருக்கின்றன. ஆன்லைனில் பாலிசி வாங்கினால் பிரீமியம் குறைவு என்பதற்காகவே சிலர் பாலிசி எடுக்கிறார்கள் கருத்து தெரிவித்துள்ள நிபுணர்கள் சில ஆன்லைன் பாலிசிகளைக் குறிப்பிட்ட வயதுக்கு மேல் வாங்க முடியாது என்று கூறியுள்ளனர்.

45
பாலிசி எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை

முதலில் எதற்காக காப்பீடு எடுக்க வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும். ஏஜென்ட் உறவினர் அல்லது நண்பர் என்பதற்காக பிறர் சொல்லி பாலிசி எடுக்க வேண்டாம், ஒரேபாலிசிக்கு ஒவ்வொரு இன்சூரன்ஸ் நிறுவனத்திலும் எவ்வளவு பிரிமியம் என்பதை விசாரியுங்கள் எங்கு பிரிமீயம் குறைவே அங்கு பாலிசியை எடுங்கள். பாலிசி எடுக்கும் முன்பு, பலிசி காலம் முடியும் வரை தொடர்ந்து பணம் கட்ட முடியுமா என்பதை முடிவெடுங்கள்.அதிக எண்ணிக்கையிலான பாலிசி எடுப்பதை தவிர்த்து விடுங்கள். உங்கள் சம்பளம், தேவை, பொறுப்புகள் போன்றவை பெரிய அளவுக்கு உயராமல் புதி இன்னொரு பாலிசி எடுக்க வேண்டாம். தேவைக்கு மீறி டிரெடினல் பாலிசிகளை எடுக்காமல் தேவையான அளவுக்கு டெர்ம் பாலிசி எடுக்கலாம்

55
ஆன்லைனில் பாலிசி வாங்கலாமா?

இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை, உங்களுக்கு என்ன மாதிரியான பாலிசி தேவை, எதற்காக இன்ஷூரன்ஸ் எடுக்கிறீர்கள், உங்களின் எதிர்காலத் திட்டம் என்ன என்பதை முதலீட்டு ஆலோசகர்களிடம் கலந்து விவாதிக்காமல் ஆன்லைனில் பாலிசி வாங்குவது சரியாக இருக்காது எனவும் சரியான முதலீட்டு ஆலோசகரிடம் நேரடியாகச் சென்று நம் தேவைக்கு ஏற்ப பாலிசி வாங்குவதுதான் சரியாக இருக்கும் என்றும் அவர்கள் சந்தை நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.உங்களுக்கு என்ன பாலிசி வேண்டும் எனத் தெளிவாகத் தெரிந்தால் மட்டுமே ஆன்லைனில் பாலிசி வாங்கலாம். இல்லையெனில் ஆன்லைனில் பிரீமியம் மட்டும் கட்டலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories