EPFO 3.0: புதிய மாற்றங்களுடன் ஜூனில் அமல் - பிஎஃப் பணம் எடுப்பது எளிதாகிறது!

Published : May 31, 2025, 02:45 PM ISTUpdated : May 31, 2025, 02:47 PM IST

தொழிலாளர் வைப்பு நிதி கணக்கில் இருக்கும் பணத்தை எளிதாக எடுக்கும் வகையில், மத்திய அரசு EPFO 3.0 திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், தொழிலாளர்கள் தங்களுடைய பிஎஃப் பணத்தை ATM/UPI வழியாக எடுக்க முடியும்.

PREV
17
அமலுக்கு வருகிறது EPFO 3.0! - நிம்மதியில் தொழிலாளர்கள்

தொழிலாளர் வைப்பு நிதி கணக்கில் இருக்கும் பணத்தை எடுப்பதில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வந்தன. இந்த நிலையில் தொழிலாளர் வைப்பு நிதி கணக்கில் இருக்கும் பணத்தை எளிமையாக எடுக்கு வகையிலான மாற்றங்கள் ஜூனில் அமலுக்கு வர இருக்கின்றன. மத்திய அரசு அண்மையில் தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் 3.0 (EPFO 3.0) என்ற ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் படி தொழிலாளர்கள் தங்களுடைய பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை ஏடிஎம் இல் இருந்து எப்படி பணம் எடுக்கிறோமோ அதேபோல எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

27
EPFO 3.0 அமைப்பு

தற்போது EPFO உறுப்பினர்கள் Provident Fund (PF) பணத்தை திரும்பப் பெற 10 முதல் 15 நாட்கள் வரை ஆகிறது. ஆனால், புதிய ATM மற்றும் UPI வசதிகள் அறிமுகமாகிய பிறகு, PF பணம் எடுப்பது நிமிடங்களில் முடியும்.

37
EPFO ATM

EPFO விரைவில் தனது புதிய மற்றும் மேம்பட்ட சேவையான EPFO 3.0-ஐ அறிமுகப்படுத்துகிறது. இந்த புதிய அமைப்பின் மூலம் உறுப்பினர்கள் ATM மற்றும் UPI வழியாக PF பணத்தை எடுக்க முடியும். இதற்கூடாக கணக்கு திருத்தம், தானாக க்ளெயிம் நிவாரணம், புகார்கள் உடனடி தீர்வு போன்ற பல சேவைகளும் டிஜிட்டலாக வழங்கப்படும்.

47
எப்போது அறிமுகமாகும்?

தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு மந்திரி மன்சூக் மண்டவியா ஏற்கனவே அறிவித்ததுபோல, EPFO 3.0 அமைப்பு ஜூன் 2025 காலத்தில் அறிமுகமாக உள்ளது. இது 9 கோடிக்கும் மேற்பட்ட PF கணக்கதாரர்களுக்கு வேகமான மற்றும் சிறந்த சேவைகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இது ஜூன் மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

57
எவ்வளவு பணம் எடுக்கலாம்?

தற்போதைய நிலைக்கு ஏற்ப PF பணம் எடுக்க 10 முதல் 15 நாட்கள் வரை ஆகிறது. ஆனால், ATM மற்றும் UPI வசதி அறிமுகமாகிய பிறகு, ஒரேநாளில் — அதுவும் நிமிடங்களில் — பணத்தை எடுக்கலாம். ஆனால், அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை மட்டுமே ATM/UPI வழியாக எடுக்க முடியும். இதனால் வேலைநாள்களில் வங்கி செல்ல வேண்டிய தேவையும், நேர இழப்பும் தவிர்க்கப்படும். மேலும், புதிய அமைப்பில் PF க்ளெயிம் செயல்முறை தானாகவே (auto mode) நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

67
EPFO கார்டு

ATM வசதிக்காக, EPFO உறுப்பினர்களுக்கு ஒரு புதிய EPF Withdrawal Card வழங்கப்படும். இந்த கார்டின் மூலம் டெபிட் கார்டு போலவே, பாலன்ஸ் செக், பணம் எடுப்பு போன்றவற்றை செய்துகொள்ளலாம்.

77
கணக்கு விவரங்களை திருத்தும் வசதி

EPFO 3.0 அமைப்பில், உறுப்பினர்கள் தங்களது பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், நிரந்தர முகவரி போன்ற விவரங்களில் ஏற்பட்ட பிழைகளை ஆன்லைன் வழியாக உடனடியாக திருத்த முடியும். OTP அங்கீகார முறையின் மூலம் பழைய மாதிரி படிவங்களை நிரப்ப தேவையில்லை. மேலும், புகார்கள் தொடர்பான அமைப்பும் மேம்படுத்தப்பட்டிருப்பதால், எதிர்காலத்தில் புகார்கள் விரைவாக தீர்க்கப்படும்.EPFO 3.0 அமைப்பு டிஜிட்டல் முறையில் PF சேவைகளை எளிமையாக்கும் ஒரு பெரிய முன்னேற்றமாகும். UPI மற்றும் ATM மூலமாக பணம் எடுப்பது தொழிலாளர்களுக்கு ஒரு பெரிய நன்மையாக இருக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories