உஷார்!.. யுபிஐ பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு.. பணம் அனுப்பும் முறையில் பெரிய மாற்றம்

Published : Mar 05, 2026, 04:09 PM IST

யுபிஐ பணப்பரிவர்த்தனைகள் தினந்தோறும் கோடிக்கணக்கில் நடக்கிறது என்றே கூறலாம். தினமும் மக்களின் வாழ்க்கையில் கூகுள்பே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகள் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

PREV
15
யுபிஐ பணப்பரிவர்த்தனையில் மாற்றம்

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை மேலும் பாதுகாப்பாகவும், வேகமாகவும் மாற்றுவதற்காக முக்கியமான மாற்றம் ஒன்று அறிமுகமாகியுள்ளது. இதுவரை பலர் யுபிஐ ஐடி அல்லது மொபைல் எண்ணை உள்ளிட்டு பணம் செலுத்தும் முறையை பயன்படுத்தி வந்தனர். இந்த முறை பொதுவாக “யுபிஐ கலெக்ட்” என்று அழைக்கப்பட்டது. ஆனால் சமீபத்திய மாற்றங்களின் படி, இந்த வசதி பல இடங்களில் படிப்படியாக நிறுத்தப்பட உள்ளது. இந்த மாற்றம் 2026 பிப்ரவரி 28 முதல் அமலுக்கு வரும் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

25
யுபிஐ விதி மாற்றம்

இதுவரை ஆன்லைன் கட்டணம் செலுத்தும்போது பயனர் தங்களின் யுபிஐ ஐடி அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை கைமுறையாக டைப் செய்து பணம் அனுப்பப்படும் வேண்டியிருந்தது. அதன் பிறகு அந்த செயலி அல்லது இணையதளம், பயனரின் யுபிஐ செயலிக்கு ஒரு பணம் கோரும் அறிவிப்பை அனுப்பும். பயனர் அந்த அறிவிப்பைத் திறந்து யுபிஐ பின் உள்ளிட்டு பணத்தை உறுதிப்படுத்துவார். இதுவே யுபிஐ சேகரிப்பு முறை எனப்பட்டது.

35
புதிய விதிகள்

இப்போது இந்த முறைக்கு பதிலாக மிகவும் எளிதான மற்றும் பாதுகாப்பான வழி வழங்கப்படுகிறது. இனி பெரும்பாலான தளங்களில் யுபிஐ செயலியின் ஐகான் அல்லது கியூஆர் குறியீடு மூலம் பணம் செலுத்தும் வசதி இருக்கும். பயனர் செயலியின் ஐகானை கிளிக் செய்தால், அவர்களின் யுபிஐ செயலி நேரடியாக திறக்கும். அல்லது கியூஆர் கோடு ஸ்கேன் செய்து சில விநாடிகளில் பணத்தை அனுப்ப முடியும்.

45
யுபிஐ ஐடி தேவையில்லை

இந்த புதிய முறையால் பணம் செலுத்தும் செயல்முறை மிகவும் வேகமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. பயனர் கைமுறையாக யுபிஐ ஐடி டைப் செய்ய வேண்டிய அவசியம் குறையும். இதனால் தவறான எண்ணை உள்ளிடுவது போன்ற பிரச்சனைகளும் குறையும்.

55
டிஜிட்டல் பேமெண்ட் விதி

அதே நேரத்தில், யுபிஐ சேகரிப்பு முறை முழுமையாக நீக்கப்படவில்லை. சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் அது தொடர்ந்து பயன்படுத்தப்படும். உதாரணமாக பங்குச்சந்தை முதலீடு அல்லது IPO விண்ணப்பம் செய்யும்போது, ​​iPhone அல்லது iOS சாதனங்களில் சில செயலிகளின் மூலம் பணம் செலுத்தும்போது, ​​ஏற்கனவே அமைக்கப்பட்ட ஆட்டோ பேமென்ட்களை மாற்றும்போது அல்லது வெளிநாட்டு இணையதளங்களில் கட்டணம் செலுத்தும்போது இந்த பழைய முறை இன்று செயல்படும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories