இனி ஹெல்த் இன்சூரன்ஸ்-க்கு ஜிஎஸ்டி இல்லை..! மத்திய அரசு அதிரடி சரவெடி!

Published : Sep 04, 2025, 06:54 AM IST

பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 12% மற்றும் 28% ஜிஎஸ்டி வரி விகிதங்கள் நீக்கப்பட்டு, 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளன. 

PREV
15

டெல்லி செங்கோட்டையில் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி, மக்களுக்கு தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்படும் என்ற அதிரடி சரவெடி அறிவிப்பை வெளியிட்டார். இது தொடர்பாக பிரதமர் தலைமையில் மூத்த மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து டெல்லியில் நேற்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

25

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 2 அடுக்குகளாக ஜிஎஸ்டி வரி வரம்பை குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிவித்தார். அந்த வகையில் 12% மற்றும் 28% ஜிஎஸ்டி வரி விகிதங்கள் நீக்கப்பட்டு இனி 5% மற்றும் 18% என மட்டுமே ஜிஎஸ்டி வரி அடுக்குகள் இருக்கும். அதேநேரத்தில் சிறப்பு ஜிஎஸ்டி வரியாக ஆடம்பர பொருட்களுக்கு 40% வரி விதிக்கப்படும் என்றார்.

35

குறிப்பாக மருத்துவ காப்பீடுக்கும், கல்வி பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதாவது தனிநபர் ஆயுள் காப்பீடு, ஹெல்த் இன்சூரன்ஸ், புற்றுநோய், அரிய வகை நோய் மற்றும் நாள்பட்ட நோய்க்கான மருந்துகள், 33 உயிர் காக்கும் மருந்துகளுக்கு இனி ஜிஎஸ்டி வரி இல்லை. ஏராளமான மருந்துகள் மீதான ஜிஎஸ்டியும் 12ல் இருந்து 5 சதவீத வரம்பில் கொண்டு வரப்பட்டுள்ளன. பார்வையை சரி செய்யும் கண்ணாடிகள், பேண்டேஜ் போன்றவைக்கு மீதான ஜிஎஸ்டி 28ல் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

45

அதேபோல் கல்வி சார்ந்து எழுதுபொருளான பென்சில், ஷார்ப்னர், கிரேயான்ஸ், நோட்டுப்புத்தகம், எரேசர், வரைபடங்கள், சார்ட் உள்ளிட்டவற்றுக்கு ஜிஎஸ்டி வரியில் விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

55

மற்ற பொருட்களை பொறுத்தவரை பாஸ்தா, மக்ரோனி, நூடுல்ஸ், பால், பனீர், பீஸா, பிரட், தேங்காய் எண்ணெய், சோப்புகள், ஷாம்புகள், சைக்கிள்கள், பல மருந்துகள் மற்றும் மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள், விவசாய உபகரணங்கள் ஆகியற்றுக்கு 12 மற்றும் 18 சவிகிதத்திலிருந்து குறைக்கப்பட்டு ஜிஎஸ்டி 5% ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை செப்டம்பர் 22ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories