ஜிஎஸ்டியில் அதிரடி மாற்றம்... 12%, 28% அடுக்குகளை நீக்க ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு

Published : Sep 03, 2025, 10:10 PM ISTUpdated : Sep 03, 2025, 10:53 PM IST

ஜிஎஸ்டி கவுன்சில் 5% மற்றும் 18% என இரண்டு முக்கிய வரி அடுக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 12% மற்றும் 28% வரி அடுக்குகள் நீக்கப்பட்டு, செப்டம்பர் 22 முதல் புதிய விகிதங்கள் அமலுக்கு வரும். சில பொருட்களுக்கு 40% சிறப்பு வரி விதிக்கப்படும்.

PREV
15
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுத்த முடிவு

சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) சீரமைக்கும் முடிவுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இனி, 5% மற்றும் 18% என இரண்டு முக்கிய வரி அடுக்குகளே இருக்கும். இந்த மாற்றம் வரும் செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று உத்தரப் பிரதேச நிதி அமைச்சர் சுரேஷ் கன்னா தெரிவித்துள்ளார்.

25
12% மற்றும் 18% வரி அடுக்குகள் நீக்கம்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இரண்டு நாள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, தற்போது நடைமுறையில் உள்ள 12% மற்றும் 28% வரி அடுக்குகள் நீக்கப்படுகின்றன. பெரும்பாலான பொருட்கள் 5% மற்றும் 18% என்ற புதிய வரி அடுக்குகளுக்குள் மாற்றப்படும். மேலும், 'சின் பொருட்கள்' என அழைக்கப்படும் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு 40% என்ற புதிய சிறப்பு வரி விதிக்கப்படும்.

35
5% வரி அடுக்குக்கு மாறிய பொருட்கள்

பாதாம், பாதாம் எண்ணெய், பிஸ்தா போன்ற உலர் பழங்கள், பேக் செய்யப்பட்ட சிற்றுண்டிகள், ஜாம், நெய், வெண்ணெய், ஊறுகாய், சட்னிகள், பாப்கார்ன், நூடுல்ஸ், சாஸ், பாஸ்தா, பிஸ்கட்கள், சாக்லேட், சோப்பு, டூத் பிரஷ், பேனா, பென்சில், குடை, சைக்கிள், குறிப்பிட்ட வகை ஆடைகள் மற்றும் காலணிகள். இவற்றின் விலையும் செப்டம்பர் 22 முதல் குறைந்துவிடும்.

45
18% வரி அடுக்குக்கு மாறிய பொருட்கள்

குளிர்சாதனப் பெட்டிகள் (ஃபிரிட்ஜ்), வாஷிங் மெஷின்கள், தொலைக்காட்சிகள் (டிவி), ஏர் கண்டிஷனர்கள் (ஏசி) உள்ளிட்ட பெரும்பாலான வீட்டு உபயோகப் பொருட்களின் ஜிஎஸ்டி வரி 28% இலிருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், சில ரக கார்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் விலையும் குறையும்.

55
வருவாய் இழப்பீடு கோரும் மாநிலங்கள்

ஜிஎஸ்டி வரி சீரமைப்பு காரணமாக தங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய வேண்டும் என எட்டு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

ஹிமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு, தெலங்கானா, மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன.

ஜார்க்கண்ட் மாநில நிதி அமைச்சர் ராதாகிருஷ்ணா கிஷோர், "நாங்கள் கூடுதல் வரி விதிப்புக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். இதுகுறித்து மத்திய அரசு பரிசீலிக்கும் என உறுதியளித்துள்ளது" என்று தெரிவித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories