டோல் பிளாசா சிக்கல்களுக்கு தீர்வு.. FASTag வைத்திருப்போர் கட்டாயம் செய்ய வேண்டியது இதுதான்

Published : Nov 06, 2025, 08:57 AM IST

டோல் பிளாசாவில் உங்கள் FASTag வேலை செய்யாததற்கு NHAI-யின் புதிய “உங்கள் வாகனத்தை அறிந்து கொள்ளுங்கள்” (KYV) சரிபார்ப்பு முறையே காரணம். இந்த பாதுகாப்பு நடவடிக்கை, மோசடிகளைத் தடுக்க உதவுகிறது.

PREV
14
Toll Plaza Issues

டோல் பிளாசாவில் உங்கள் FASTag திடீரென வேலை செய்யவில்லையா? கவலைப்பட வேண்டாம். பலர் இதே பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். இதற்குக் காரணம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிமுகப்படுத்திய புதிய “உங்கள் வாகனத்தை அறிந்து கொள்ளுங்கள்” (KYV) சரிபார்ப்பு முறையாகும். இது ஒவ்வொரு FASTag-யும் சரியான வாகனத்துடன் இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்யும் பாதுகாப்பு நடவடிக்கை. இதன் மூலம், மற்ற வாகனங்களின் டேக்-களை தவறாகப் பயன்படுத்தும் மோசடிகளைத் தடுக்க முடிகிறது.

24
FASTag KYV

FASTag KYV என்பது உங்கள் வாகனத்தை அடையாளம் காணும் ஒரு சுலபமான சரிபார்ப்பு நடைமுறை. இதற்காக, உங்கள் காரின் பதிவு சான்றிதழ் (RC) மற்றும் FASTag ஒட்டியுள்ள முன்புறப் புகைப்படத்தை மட்டும் பதிவேற்ற வேண்டும். இதன்மூலம், அந்த டேக் உண்மையில் அந்த வாகனத்திற்கே சொந்தமானது என்பதைக் காண்பிக்க முடியும். ஆரம்பத்தில் இந்த நடைமுறை சற்று சிரமமாக இருந்தது. ஆனால் இப்போது NHAI சில முக்கியமான மாற்றங்களைச் செய்து அதை எளிமையாக்கியுள்ளது.

34
FASTag Verification

இப்போது பல புகைப்படங்களைப் பதிவேற்ற வேண்டிய அவசியமில்லை. உங்கள் வாகனத்தின் முன்புறம், எண் பலகை மற்றும் FASTag தெளிவாக தெரியும் ஒரு புகைப்படம் போதும். உங்கள் வாகன எண் உள்ளிட்டவுடன், VAHAN தரவுத்தளத்திலிருந்து RC விவரங்கள் தானாகவே பெறப்படும். KYV முடிக்கப்படாமல் இருந்தால் உடனே FASTag முடக்கப்படாது; அதற்கு பதிலாக NHAI SMS மூலம் நினைவூட்டல் அனுப்பப்படும். ஒரே மொபைல் எண்ணில் பல வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால், எந்த வாகனத்திற்கான சரிபார்ப்பை முதலில் செய்ய வேண்டும் என்பதை நீங்களே தேர்வு செய்யுங்கள் செய்யலாம்.

44
Know Your Vehicle

[https://fastag.ihmcl.com](https://fastag.ihmcl.com) என்ற இணையதளத்திற்குச் சென்று உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் உள்நுழைய வேண்டும். வாகனத்தின் முன்புற புகைப்படத்தைப் பதிவேற்றவும். RC விவரங்கள் தானாக நிரம்பும், சரிபார்த்து சமர்ப்பிக்கவும். உங்கள் FASTag சரியாக ஒட்டியிருந்தால், எந்த பிரச்சனையும் இல்லாமல் அது செயல்படும். இப்படி சில எளிமையான படிகளை பின்பற்றினால், டோல் பிளாசாவில் உங்கள் பயணம் தடையின்றி தொடரலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories