கார், வேன், ஜீப் வைத்திருப்பவர்கள்.. FASTag சிக்கல் தீர்ந்தது! NHAI-ன் புதிய அறிவிப்பு

Published : Nov 03, 2025, 09:03 AM IST

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) FASTag 'Know Your Vehicle' (KYV) செயல்முறையை எளிதாக்கியுள்ளது. இனி வாகனத்தின் முன்பக்கப் புகைப்படம் மட்டுமே போதுமானது. மேலும் RC விவரங்கள் VAHAN தரவுத்தளத்திலிருந்து தானாகப் பெறப்படும்.

PREV
14
தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

தேசிய நெடுஞ்சாலை ஆணையமான (NHAI), FASTag பயனர்களுக்கான Know Your Vehicle (KYV) செயல்முறையை தற்போது எளிமைப்படுத்தியுள்ளது. இந்த KYV நடைமுறை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் நோக்கம் ஒரு வாகனத்தின் FASTag சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என உறுதி செய்தல். ஆனால், புகைப்படங்கள், ஆவணங்கள், வலைத்தளப் பிழைகள் காரணமாக வாகன உரிமையாளர்கள் பல சிரமங்களை சந்தித்தனர். சிலர் தங்கள் FASTag திடீரென முடக்கப்பட்டதாகவும் புகார் அளித்தனர்.

24
FASTag சேவைகள்

இப்போது புதிய வழிகாட்டுதல்படி, FASTag சேவைகள் உடனடியாக நிறுத்தப்படாது. பயனர்களுக்கு KYV நிறைவு செய்ய போதுமான நேரம் வழங்கப்படும். மேலும், முன்பு போல வாகனத்தின் பக்கப் படம் அவசியமில்லை. இப்போது முன்பக்கப் புகைப்படம் (எண் பலகை மற்றும் FASTag தெளிவாகத் தெரியும்) மட்டுமே தேவை. இதனால், KYV செயல்முறை மிக எளிதாகவும் வேகமாகவும் மாறியுள்ளது.

34
வாகன சரிபார்ப்பு

மேலும், பயனர் வாகன எண் அல்லது மொபைல் எண்ணை உள்ளிட்டால், VAHAN தரவுத்தளத்திலிருந்து RC விவரங்கள் தானாக பெறப்படும். ஒரே மொபைல் எண்ணில் பல வாகனங்கள் இருந்தால், அதிலிருந்து தேவையான வாகனத்தை தேர்ந்தெடுக்கலாம். KYV விதிகள் அமலுக்கு வரும் முன் வழங்கப்படும் FASTagகளும் புகார்கள் வராத வரை செயல்பாட்டிலேயே இருக்கும். வங்கிகள் பயனர்களுக்கு SMS மூலம் அலெர்ட்களையும் அனுப்பும்.

44
வாகன உரிமையாளர்

கடைசியாக, பயனர்களுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், 1033 என்ற நெடுஞ்சாலை ஹெல்ப் லைன் மூலம் புகார் அளிக்கலாம். வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும். NHAI கூறியது, இத்தகைய எளிமைப்படுத்தல் நடவடிக்கைகள், எதிர்காலத்தில் அறிமுகமாக இருக்கும் Multi-Lane Free Flow (MLFF) எனப்படும் தடையற்ற டோல் வசூல் முறைமைக்கான முன்னேறும்.

Read more Photos on
click me!

Recommended Stories