திரைப்படம் பார்ப்பவர்களுக்காக சில கிரெடிட் கார்டுகள் வழங்கும் சிறப்பு சலுகைகள் பற்றி இந்த கட்டுரை விவரிக்கிறது. இதன் மூலம் நீங்கள் இலவசமாகவும், தள்ளுபடியாகவும் திரைப்படத்தை பார்க்கலாம்.
வாரந்தோறும் திரைப்படம் பார்க்கும் பழக்கமுள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த செய்தி வெளியாகி உள்ளது. சில கிரெடிட் கார்டுகள் மூலம் “Buy 1 Get 1 Free” அல்லது மாதாந்திர டிக்கெட் தள்ளுபடி போன்ற சலுகைகள் கிடைக்கின்றன.
24
ஹெச்டிஎப்சிஸ் டைம்ஸ் கார்டு
புக் மை ஷோ (BookMyShow) மூலமாக டிக்கெட் புக்கிங் செய்யும் போது ஒரு டிக்கெட்டுக்கு ரூ.150 வரை தள்ளுபடி கிடைக்கும். ஒரு பரிவர்த்தனையில் ரூ.350 வரை சேமிக்கலாம். மாதம் நான்கு டிக்கெட்டுகளுக்கு சலுகை பொருந்தும். இதனுடன் Times Prime உறுப்பினர்தன்மையும் சேர்த்து கிடைக்கும்.
34
ஆக்சிஸ் மைஸோன் கார்டு
பேடிஎம் (Paytm) வழியாக டிக்கெட் புக்கிங் செய்வோருக்கு, மாதத்திற்கு ஒரு இலவச டிக்கெட் (ரூ.200 வரை) மற்றும் Zomato, Myntra, Spotify தள்ளுபடிகளும் உண்டு. இளம் தலைமுறைக்கு இது பெரும் பயனாகும்.
BookMyShow மூலம் எஸ்பிஐ ELITE கார்டு வைத்தவர்கள் “Buy 1 Get 1 Free” சலுகையுடன் ஆண்டுக்கு ரூ.6,000 வரை சேமிக்க முடியும். ஐசிஐசிஐ Coral கார்டு வைத்தவர்கள் மாதத்தில் இருமுறை 25% தள்ளுபடியில் டிக்கெட்டுகளை பெறலாம்.