ஜூலை மாதம் முதல் பான் கார்டு, ரயில் டிக்கெட், கிரெடிட் கார்டு உள்ளிட்ட பல விஷயங்களில் முக்கியமான மாற்றங்கள் வரவுள்ளன. இந்த மாற்றங்கள் நம் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் என்பதால் முன்கூட்டியே தெரிந்துகொள்வது அவசியம்.
ஒவ்வொரு மாதமும் சில புதிய விதிகள் வந்துகொண்டே இருக்கின்றன. இவை நமக்கு தெரியாம போனால் அன்றாட வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படலாம். அதவும் நிதி தொடர்பான பிரச்சினைகள் எழுந்தால் கடைசி நேரத்தில் சிரமத்திற்கு உள்ளாக வேணடியிருக்கும்.
26
பான் கார்டு – இனி ஆதார் கட்டாயம்
நீங்கள் பான் கார்டு வாங்க நினைக்கிறீர்களா?. இப்போ வரை, வேறு அடையாள அட்டை அல்லது பிறப்புச் சான்றிதழ் இருந்தா போதும். ஜூலை 1-ம் தேதி முதல், அதில் மாற்றம். இனிமேல், ஆதார் கார்டு சரிபார்ப்பு கட்டாயம்.பான் இல்லாமல் வருமான வரி செலுத்த முடியாது. அதனால், ஆதார் கார்டை தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.
36
ஹெச்.டி.எஃப்.சி கிரெடிட் கார்டு கட்டணங்கள் – கட்டணங்கள் அதிகம்
ஜூலை 1 முதல், HDFC கிரெடிட் கார்டு கொண்டு வாடகை செலுத்தினால் 1% கட்டணம் வசூலிக்கப்படும். அதிகபட்ச கட்டணம் ₹4,999 வரை.ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளில் மாதத்திற்கு ₹10,000 மேல் செலவு செய்தால், அந்த தொகைக்கும் 1% கட்டணம்.மற்ற பில்கள் ₹50,000 மேல் செலவு செய்தால் 1% கட்டணம்.வாலட் ரீலோடு ₹10,000 மேல் இருந்தால் 1% கட்டணம். இன்னும் நல்ல செய்தி என்னவென்றால், இன்ஷூரன்ஸ் பில் கட்டினால் ரிவார்டு புள்ளிகள் வரும். மாதம் 10,000 புள்ளிகள் வரை பெறலாம்.
ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம், ஆப் மூலமாக ரயில் தட்கல் டிக்கெட் பதிவு செய்வது மிகவும் சாதாரணம். ஆனால் ஜூலை முதல் புதிய கட்டுப்பாடு.ஜூலை 1 முதல் ஆதார் இணைப்பு கட்டாயம். ஜூலை 15 முதல், ஆதார் O.T.P சரிபார்ப்பு வேண்டும். அதாவது, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் O.T.P பாஸ்வேர்டு போட்டு மட்டுமே தட்கல் டிக்கெட் கிடைக்கும்.
56
எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு – விமான காப்பீடு நிறுத்தம்
முன்பே SBI கிரெடிட் கார்டில் விமான டிக்கெட் புக்கிங் செய்தால், இலவசமாக ரூ.1 கோடி விபத்து காப்பீடு இருந்தது. ஜூலை 15 முதல், இது நிறுத்தப்படுகின்றது. SBI ELITE, Miles ELITE, Miles PRIME – ₹1 கோடி காப்பீடு கிடையாது. SBI PRIME, PULSE – ₹50 லட்சம் காப்பீடு கிடையாது.இனி விமான பயணத்தில் தனியாக காப்பீடு எடுக்க வேண்டும்.
66
வருமான வரி தாக்கல் – கால அவகாசம் நீட்டிப்பு
முதலில், வருமான வரி தாக்கல் கடைசி தேதி ஜூலை 31 என்று இருந்தது. இப்போ, செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனா, கடைசிநாள் வரைக்கும் காத்திருக்காமல் முன்பே தாக்கல் செய்து விடுவது நல்லது.