பணத் தேவை ஏற்படும்போது, தங்கத்தை விற்பதா அல்லது கடன் வாங்குவதா என்ற குழப்பம் பலருக்கும் உண்டு. தங்கக் கடன் வட்டி, ஏல அபாயம் போன்ற அம்சங்களை கொண்டு முடிவெடுக்க வேண்டும்.
இந்திய குடும்பங்களில் தங்கம் ஒரு ஆபரணம் மட்டுமல்ல. தங்கம் பாதுகாப்பின் அடையாளமாக உள்ளது. பணத் தேவை ஏற்படும்போது, தங்கத்தை விற்பதா அல்லது கடன் வாங்குவதா? இரண்டில் எது சிறந்த தேர்வு எனப் பார்ப்போம். வங்கிகள் உங்கள் நகைகளின் தரம், எடையைச் சரிபார்த்து கடன் வழங்கும். சில மணிநேரங்களில் கடன் பெறலாம்.
24
தங்கத்தை விற்றால்
வட்டி 8% முதல் 12.5% வரை இருக்கும். சரியான நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டால் தங்கம் ஏலம் போகும். புதிய கடன் வேண்டாம் என்பவர்கள் தங்கத்தை விற்கலாம். உடனடியாகப் பணம் கிடைக்கும், கடன் சுமை இருக்காது. ஆனால், சந்தை விலையை விட 10-15% குறைவாகவே நகைக்கடைக்காரர்கள் பணம் தருவார்கள்.
34
தங்கக் கடன் பெற்றால்
எதிர்காலத்தில் தங்கத்தின் விலை உயரும் என நினைப்பவர்கள், குடும்பச் சொத்தை விற்க விரும்பாதவர்கள் தங்கக் கடன் பெறலாம். அதிக வட்டி செலுத்துபவர்கள் அல்லது வேறு முதலீடு செய்பவர்கள் தங்கத்தை விற்கலாம்.
வட்டி விகிதங்கள், கடன் காலம், தனிப்பட்ட பணத் தேவைகள், எதிர்கால நிதி இலக்குகள் மற்றும் தங்கத்துடனான உங்கள் உணர்வுப்பூர்வமான பிணைப்பைக் கருத்தில் கொள்ள வேண்டும். உங்கள் சூழலைப் பொறுத்தே முடிவு அமையும்.