அம்பானி குடும்பத்தின் அன்டிலியா வீட்டைக் காலி செய்ய புதிய நெருக்கடி!
முகேஷ் அம்பானியின் அன்டிலியா இல்லம் வக்ஃபு வாரிய நிலத்தில் கட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. புதிய வக்ஃபு திருத்தச் சட்டம் அம்பானி குடும்பத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
முகேஷ் அம்பானியின் அன்டிலியா இல்லம் வக்ஃபு வாரிய நிலத்தில் கட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. புதிய வக்ஃபு திருத்தச் சட்டம் அம்பானி குடும்பத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்டிலியா:
முகேஷ் அம்பானி, நீதா அம்பானி, ஆகாஷ் அம்பானி ஆகியோர் வசித்துவரும் ஆடம்பர இல்லமான ஆன்டிலியா, நாட்டின் மிகவும் ஆடம்பரமான வீடுகளில் ஒன்றாகும். ரூ.15000 கோடி மதிப்புள்ளதாகக் கூறப்படும் இந்த வீடு மும்பையில் அமைந்துள்ளது. சமீபத்தில் இயற்றப்பட்டுள்ள வக்ஃபு திருத்தச் சட்டம் மூலம் அன்டிலியாவுக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.
பரேட் சாலையில்:
மும்பையின் பரேட் சாலையில் அமைந்துள்ள இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த சொத்துக்களில் ஒன்றான அன்டிலியா, வக்ஃபு வாரியத்தின் நிலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. TV9 ஹிந்தியின் அறிக்கையின்படி, முகேஷ் அம்பானி 2002 ஆம் ஆண்டில் வக்ஃபு வாரியத்திடமிருந்து நான்கரை லட்சம் சதுர அடி நிலத்தை சுமார் ரூ.21 கோடிக்கு வாங்கினார்.
சர்ச்சைக்குரிய இடம்:
மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், வக்ஃபு வாரியத்தின் சொத்தை தனியார் பயன்பாட்டிற்கு விற்க முடியாது என்று வக்ஃபு வாரியம் கூறியதால், அன்டிலியா நில ஒப்பந்தம் சர்ச்சைக்குள்ளானது. நிலத்தின் முந்தைய உரிமையாளரான கரீம் பாய் இப்ராஹிம், மதக் கல்வி மற்றும் அனாதை இல்லம் கட்டுவதற்காக வக்ஃபு வாரியத்திற்கு நிலத்தை வழங்கினார்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு:
ஆனால், அந்த நிலம் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானிக்கு விற்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீண்ட காலமாகவே நிலுவையில் உள்ளது. வக்ஃபு திருத்தச் சட்டம் அமலுக்கு வந்ததை அடுத்து, இந்த வழக்கில் தீர்பு அம்பானி குடும்பத்திற்கு எதிராக சென்றால், அவர்கள் அன்டிலியா இல்லத்தைக் காலி செய்ய வேண்டியிருக்கும்.
வக்ஃபு திருத்தச் சட்டம்:
அம்பானிக்கு நெருக்கடியை உருவாக்கியுள்ள வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு ஞாயிற்றுக்கிழமை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இந்த மசோதா இந்த வார தொடக்கத்தில் இரு அவைகளிலும் சூடான விவாதங்களுக்குப் பிறகு நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் ஒப்புதலை அடுத்து அந்த மசோதா சட்டமாக மாறிவிட்டது.