அம்பானியுடன் டீல் பேசும் குட்டீஸ்! ஜியோவுக்கு கைமாறும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்!

Published : Nov 11, 2024, 01:41 PM ISTUpdated : Nov 11, 2024, 01:47 PM IST

அம்பானி ஹாட்ஸ்டார் தளத்தை வாங்கிவிட்டால், அதன் பெயர் ஜியோ ஹாட்ஸ்டார் என மாறலாம். இதனால் JioHotstar.com என்ற டொமைன் முகவரி அதிக கவனம் பெற்றுள்ளது.

PREV
16
அம்பானியுடன் டீல் பேசும் குட்டீஸ்! ஜியோவுக்கு கைமாறும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்!
Mukesh Ambani

8,49,926 கோடி ரூபாய் சொத்துகளுடன் முகேஷ் அம்பானி இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரராக உள்ளார் . அவர் தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 1727000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சந்தை மூலதனத்துடன் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக உள்ளது.

26
Jio Hotstar merger

இந்த ஆண்டின் தொடக்கத்தில், முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோ சினிமா நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தை வாங்க வால்ட் டிஸ்னியுடன் முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது எனக் கூறப்படுகிறது. இரண்டு நிறுவனங்களையும் ஒன்றிணைக்க அம்பானி திட்டமிட்டுள்ளார். அதற்கான வேலைகள் நடந்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

36
Disney Plus HotStar

அம்பானி ஹாட்ஸ்டார் தளத்தை வாங்கியதும் அதன் பெயர் ஜியோ ஹாட்ஸ்டார் என்று மாற வாய்ப்பு உள்ளது. இதனால், JioHotstar.com டொமைன் அதிக கவனம் பெற்றுள்ளது. இதை டெல்லியைச் சேர்ந்த ஆப் டெவலப்பர் ஒருவர் ஏற்கெனவே வாங்கியிருக்கிறார். ஹாட்ஸ்டார் தொடர்பாக வால்ட் டிஸ்னி மற்றும் ஜியோ சினிமா இடையேயான ஒப்பந்தம் முடிவடைவதற்கு முன்பே டொமைனை வாங்கியுள்ளார்.

46
Jio Hotstar

கடந்த மாதம் அந்த டெவலப்பர் தனது மேற்படிப்புக்கு நிதி திரட்டுவதற்காக JioHotstar.com டொமைனை ரூ.1 கோடி விலையில் விற்க தயாராக இருப்பதாக ஒரு கடிதத்தை வெளியிட்டார். "இந்த டொமைனை நான் வாங்கியற்கான காரணம் ரொம்ப சிம்பிள். இதன் மூலம் கேம்பிரிட்ஜில் படிக்கும் எனது கனவை என்னால் நிறைவேற்றிக்கொள்ள முடியும்" என்று கூறினார்.

56
Jainam & Jivika

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் அவரது ஆஃபரை நிராகரித்துவிட்டது. ஆனால், அந்த டொமைனை துபாயைச் சேர்ந்த குட்டீஸ் வாங்கியுள்ளனர். இரட்டையரான ஜெய்னம், ஜீவிகா இருவரும் SevakArmy.com என்ற பெயரில் சமூக சேவை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் டெல்லியைச் சேர்ந்த டெவலப்பரிடம் இருந்து jiohotstar.com டொமைனை வாங்கியுள்ளனர். அவரது மேற்படிப்புக்குத் தேவையான ஒரு தொகையை அவருக்குக் கொடுத்துள்ளனர்.

66
jiohotstar.com

இந்நிலையில், ​​முகேஷ் அம்பானியின் நிறுவனத்துக்கு அந்த டொமைனை இலவசமாகத் தருகிறோம் என்று ஜெய்னம், ஜீவிகா இருவரும் அறிவித்துள்ளனர். சேவை நோக்கிற்காக மட்டும்தான் அந்த டெவலப்பரிடம் இருந்து டொமைனை வாங்கினோம் என்றும் ரிலையன்ஸ் ஜியோ இந்த டொமைனை வாங்க விரும்பினால் இலவசமாகவே வழங்குவோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதன் மூலம் எந்தச் செலவும் இல்லாமல் இலவசமாகவே jiohotstar.com டொமைனைப் பெறும் வாய்ப்பு முகேஷ் அம்பானியின் நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories